Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஆண்ட்ராய்டு போனில் மல்டிவிண்டோ அம்சத்தை இயக்குவது எப்படி?
ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களை மேலும் மேலும் கவர அவ்வப்போது ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் பல புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். போட்டிகள் நிறைந்த ஸ்மார்ட்போன் சந்தையில் அப்போதுதான் ஒரு நிலையான இடத்தை தக்க வைத்து கொள்ள முடியும்.
இந்நிலையில் சமீபத்தில் அறிமுகமான வசதி ஸ்பிளிட் ஸ்க்ரீன் என்று சொல்லக்கூடிய ஒரே ஸ்க்ரீனில் இரண்டு விண்டோக்களை ஓப்பன் செய்வது. கம்ப்யூட்டரில் மட்டுமே சாத்தியப்பட்ட இந்த வசதியை தற்போது வரும் அனைத்து ஸ்மார்ட்போன் புதிய மாடல்களில் அறிமுகம் செய்திருந்தாலும் தற்போது ஆண்ட்ராய்டு 7.0 வெர்ஷனில் இந்த வசதி எளிமையாக கிடைக்கின்றது.


மல்டி விண்டோ ;
தற்போது ஸ்மார்ட்போன் பொருத்தமாட்டில் அதிகப் படியான ஆப் வைத்துகொள்ளமுடியும். ஆனால் அதற்க்கான சேமிப்புதிறன் இருத்தல் வேண்டும். ஆப் பொருத்தவரை இரண்டு விண்டோக்களில் வைத்துப் பயன்படுத்தமுடியும்.

மல்டி விண்டோ பயன்முறையை :
முதலில் உங்கள் ஆண்ட்ராய்டை முறையாக ரூட் செய்ய வேண்டும்.

வழிமுறை-1
ரூட் செய்ய செய்தபின்னால் கூகிள் பிளேஸ்டோர் சென்று ரூட் எக்ஸ்ப்ளோரர் பதிவிறக்கம் செய்யவேண்டும்.

வழிமுறை-2
இப்போது ரூட் எக்ஸ்ப்ளோரரில் சென்று அதில்உள்ள டைரக்டரி-சிஸ்டம் போன்றவற்றில் உள்நுழையவேண்டும்.

வழிமுறை-3
சிஸ்டம் உள்நுழைந்தபின்பு பில்ட் பிராப் (build.prop)கிளிக் செய்யவும், இப்போது கோப்பில் மல்டிவிண்டோக்கு தகுந்தபடி பிலட் டைப் போன்றவற்றை மாற்றி அமைக்க சேமிக்க வேண்டும்.

வழிமுறை-4
இப்போது கோப்புகளை சேமித்தப்பின் உங்கள் ஆண்ட்ராய்டு போன் ரீ-பூட் செய்ய வேண்டும்.

வழிமுறை-5
அடுத்தது ஸ்மார்ட்போனில் டெவெலப்பர் பயன்முறையை இயக்க வேண்டும், டெவெலப்பர் செட்டிங் முறையைப்பயன்படுத்தி உங்களுக்கு தகுந்த மல்டி விண்டோக்களை தேர்வு செய்ய முடியும்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
