பல பல சர்ச்சை கருத்துக்களை டீசரிலேயே விளாசி கிழித்திருக்கும் படம்தான் R K நகர். இதன் அதிகாரப்பூர்வ டீசர் நேற்று வெளியானது.

இந்த படத்தில் வைபவ், சனா அல்தாப், சம்பத், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, இனிகோ, பிரேம் ஜி, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ் போன்றோர் நடிக்கின்றனர்.

rk nagar

அப்படியே இந்த கூட்டணி வெங்கட் பிரபு கூட்டணி என்பது மறைமுகமாக உங்களுக்கு புரிந்திருக்கும். ஆம் படத்தை வெங்கட் பிரபு தயாரிக்கிறார் அதனால் முழு நையாண்டி, குசும்பு வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன ஒன்று வழக்கமான வெங்கட் பிரபு படங்கள் போல் பொறுப்பற்ற காமெடி காட்சிகள் மட்டுமின்றி இந்த படத்தில் மக்களுக்கு தேவையான பல விசயங்களை புகுத்தியுள்ளார்களாம்.

இதில் நடித்திருக்கும் சனா அல்தாப் மற்றும் அஞ்சனா கீர்த்தி இருவரும் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்தவர்கள்.

rk nagar

படத்தின் இசையமைப்பாளர் வெங்கட் பிரபுவின் தம்பியும் நகைச்சுவை நடிகருமான பிரேம் ஜி அமரன்தான், இவர் இதற்கு முன் ஞாபகம் வருதே, துணிச்சல், தோழா, நெஞ்சத்தை கிள்ளாதே, அதே நேரம் அதே இடம், என்னமோ நடக்குது, மாங்கா, அச்சமின்றி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். படத்தின் இயக்குனர் சரவண ராஜன், இதற்கு முன் வடகறி படத்தை இயக்கியவர்.

படத்தின் டிரைலரை பொறுத்த வரை இது அரசியல் ஒரு புறமும் காதல் ஒரு புறமும் நடக்கும் கதை போல் தோன்றுகிறது. டிரைலரின் ஆரம்பம் முதல் சம்பத் பேசும் வசனங்கள் மிகவும் வன்மையாக இருக்கிறது. சரியோ தவறோ சில பிரச்சனைகளை முன்னோக்கி யோசித்து அந்த காட்சிகளையும், வசனங்களையும் தவிர்ப்பதே சென்சார் போர்டின் வேலை. சம்பத்தின் வசனங்கள் எந்த அளவிற்கு எதிர்ப்பை உண்டாக்கும் என்று சென்சார் போர்டு யோசித்ததா என்று தெரியவில்லை.

சரி என்னென்ன அப்படி சர்ச்சையான வசனங்கள் இருக்கிறது என்று பார்ப்போம்.

rk nagar
  1. முதல் சர்ச்சை படத்தின் டைட்டில் R K நகர்
  2. டெங்கு மற்றும் குப்பை கழிவுகள் பற்றிய வசனம்
  3. ஊருக்குள்ள மட்டும் ஜவுளிக்கடை எரிஞ்சால் உடனே போய் அணைக்க தெரியுதுல்ல
  4. நான் ஒரு கேள்விகேக்குறேன் பதில் சொல்றியா ‘அம்மா எப்படி செத்துச்சு?’
  5. ஒவியாவுக்காக கமல் சார் பீல் பண்ணிட்டு இருக்காரு
  6. நடிகன்னா உனக்கு ஒட்டு போற்றுவாங்ளா? எம். ஜி.ஆர்ரா நீ?

இந்த வசனங்கள் சமீபத்திய சூழல்களை சாடுவது போன்று தோன்றினாலும் சர்ச்சையை கிளப்ப இங்கு கூடங்களுக்கா பஞ்சம்? எப்படியும் அணி அணியாக திரண்டு ஆர்பாட்டம் செய்யவும், தனியார் தொலைகாட்சிகளில் விவாதம் பேசவும் கிளம்பிவிடுவார்கள்.

தொடர்ந்து சென்னை குப்பத்து இளைஞன் கதாபாத்திரத்திலேயே நடித்து வரும் வைபவுக்கு இதுவும் அதே போன்ற கதாபாத்திரம்தான். டிரைலரில் வைபவின் வசனங்கள் வழக்கம் போல் இவர் நண்பருடன் அடிக்கும் காதல் அரட்டை போன்றே உள்ளது.

படம் ஜனவரிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியாகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். இதோ அந்த டிரைலர் வீடியோ உங்கள் பார்வைக்கு.