தனிப்பட்ட முடிவுகள் சில நேரங்களில் பலரையும் பாதிக்கும் விசாலின் இந்த முடிவு தான் இப்போதைக்கு ஒரே பேச்சாக உள்ளது அப்படி என்ன முடிவு எடுத்தார் விசால் வருகிற 30ஆம் தேதி ஸ்ட்ரைக் ஒன்றை அறிவித்துள்ளார்.

1996 ஆம் ஆண்டு இதே போல் ஒரு ஸ்ட்ரைக் ஒன்றை திரை உலகம் அறிவித்தது ஆறுமாதமாக ஒருவருக்கும் வேலை இல்லை சினிமாவை உயிராக எண்ணியவனுக்கு வேறு வேலை செய்யவும் மனமில்லை இதில் என்ன கொடுமை என்றால் வேலை இன்றி தவித்த தொழிளார்களுக்கு கஞ்சி தொட்டி திறக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டது மீண்டும் அதே போல் ஒரு நிலைமை வந்தால் எப்படி சமாளிப்பது !!

கோடிகளில் புரளும் நடிகர்கள் கோடை வெயிலை சமாளிப்பது போல் வெளிநாடுகளுக்கு பறந்து விடுவார்கள் ஆனால் துணை நடிகர்கள் லைட் மேன்கள் போன்றவர்களின் நிலைமை அதள பாதாளம் அல்லவா போய்விடும்

மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கிய தயாரிப்பாளர்கள் திரை உலகம் ஸ்ட்ரைக் அறிவித்துள்ளது வட்டியும் அசலும் தாமதமாக கிடைக்கும் என்று கூறினால் அதை பணம் கொடுத்தவர்கள் ஏற்றுக்கொள்வார்களா ???

தற்போது நிலுவையில் உள்ள படங்களின் நிலைமை என்னாவது ??

பாம்பை கொல்ல கீரியை வாங்கினேன் கீறி பாம்பையும் கொன்று இப்போது கோழியையும் கொள்கிறதே என்று புலம்புகிறார்கள் புதிய தயாரிப்பாளரை தேர்வு செய்த திரை உலகினர்.