மும்பை: ஸ்ரீதேவி கேட்டு எப்படி மறுக்க முடியும் என இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். சில ஆண்டுகள் சினிமாவில் இருந்து தள்ளி இருந்த ஸ்ரீதேவி இங்கிலீஷ் விங்கிலீஷ் படம் மூலம் திரும்பி வந்தார்.

படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. படத்தை பார்த்த சீனியர் நடிகைகள் நமக்கு இப்படி ஒரு படம் கிடைக்காதா என்று ஏங்கினார்கள். இந்நிலையில் ஸ்ரீதேவி நடித்துள்ள படம் மாம்.(அம்மா)

அதிகம் படித்தவை:  பிரேம்ஜி இசையில் எஸ் பி பாலசுப்ரமணியன் - சித்ரா பாடியுள்ள “பார்ட்டி” பட‘கொடி மாங்கனி’ பாடல் லிரிகள் வீடியோ !

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி, நவாஸுத்தீன் சித்திக்கி, அக்ஷய் கன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள மாம் படத்தை ரவி உத்யவார் இயக்கியுள்ளார். படம் ஜூலை மாதம் ரிலீஸாக உள்ளது.

இசைப்புயல்

இசைப்புயல்

ஸ்ரீதேவியின் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரஹ்மான் ஸ்ரீதேவியின் படத்திற்கு இசையமைத்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்க

ரஹ்மான்

ரஹ்மான்

மாம் படத்தில் பணியாற்றியது குறித்து ரஹ்மான் கூறும்போது, ஸ்ரீதேவியின் படத்தில் பணியாற்றியது ஒரு கவுரவம். அவர் படத்தில் வேலை செய்ய முடியும் என்று நான் நினைக்கவே இல்லை என்றார்.

அதிகம் படித்தவை:  அறிவுரைகளை ஏற்பதும் இல்லை... வழங்குவதும் இல்லை: கமல் ப்ளீச்
மறுக்க முடியாது

மறுக்க முடியாது

நான் சிறு வயதில் இருந்தே ஸ்ரீதேவியின் மிகப் பெரிய ரசிகன். அப்படி இருக்கும்போது அவர் என்னிடம் வந்து தன் படத்திற்கு இசையமைக்குமாறு கேட்டால் நான் எப்படி மறுக்க முடியும். அவர் ஒரு அருமையான நடிகை என ரஹ்மான் தெரிவித்துள்ளார்.