Videos | வீடியோக்கள்
பிக் பாஸ் வீட்டில் பாலாவை தேம்பித் தேம்பி அழ வைத்த ஹவுஸ் மேட்.. குவியும் ரசிகர்கள் ஆதரவு!
சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிவரும் ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் இந்த மாதம் நான்காம் தேதி தொடங்கி கோலாகலமாக ஒளிபரப்பாகி வருகிறது.
மேலும் இந்த நிகழ்ச்சியை பார்க்க வைப்பதற்காகவே தினசரிப் புரோமோக்களை வெளியிட்டு ரசிகர்களை குவித்து வருகின்றனர் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவினர்.
அந்த வகையில் இன்று விஜய் டிவி வெளியிட்டிருக்கும் புரோமோவில் பாலாஜியை ஒரு ஹவுஸ் மேட் அழ வைத்திருப்பது ரசிகர்களை கடுப்பேத்தி உள்ளது.
தற்போது விஜய் டிவி வெளியிட்டிருக்கும் புரோமோவில் ரியோ, நிஷா, அர்ச்சனா உள்ளிட்டோர், பாலாஜி நேற்றைய நிகழ்ச்சியில் கூறியதை பூதாகரமான பிரச்சனையாக மாற்றியுள்ளனர்.
அதாவது தன்னை தூக்கத்திலிருந்து எழுப்பியதற்காக அடுத்த வாரம், ‘தான் தலைவர் ஆனால் உங்களை அம்மியில் அரைக்க விடுவேன்’ என்று பாலா விளையாட்டாக பேசிய ஒரு விஷயத்தை அவர் பெண்களை குறிப்பிட்டு பேசியது போல் அர்ச்சனாவும், ரியோவும் சித்தரிக்க ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் அந்தப் பிரச்சனையை ஜவ்வாக இழுத்து அர்ச்சனா மேலும் மேலும் பாலாஜியை சீண்ட, இதை தாங்க முடியாத பாலாஜி கண்ணீர் விட்டு வெளியே சென்று அழுதிருப்பது இந்த புரோமோவில் காட்டப்பட்டுள்ளது.
மேலும் ‘சும்மா தூங்கிட்டு இருந்த சிங்கத்தை சொரிஞ்சு விட்ட கதையா’ ரியோவும், அர்ச்சனாவும் பாலாஜிய சீண்டி அவரோட மொத்த ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகி இருக்காங்க.
எனவே, இந்த புரோமோ வீடியோவை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் பலர் பாலாஜிக்கு இப்போ இருந்தே ஓட்டு போட தொடங்கி, தங்களுடைய ஆதரவை குவித்த வண்ணம் இருக்கின்றனர்.
மேலும் இந்த புரோமோ வீடியோவை பார்க்க கீழே கிளிக் செய்யவும்:
