Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியானது லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ரெடியாகும் “ஹவுஸ் ஓனர்” பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.
லட்சுமி ராமகிருஷ்ணன் நடிகை, இயக்குனர், டிவி தொகுப்பாளர், பேஷன் டிசைனர் என்று பல துறைகளில் கலக்குபவர்.
‘ஹவுஸ் ஓனர்’
‘ஆரோகணம்’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘அம்மணி’ ஆகிய படங்களை தொடர்ந்து லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள படம் ‘ஹவுஸ் ஓனர்’.

Lovelyn – Pasanga Kishore
’பசங்க’ படத்தில் நடித்த கிஷோர் கதாநாயகனாகவும், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாகவும் இப்படத்தில் நடிக்கின்றனர். கிஷோர், சுப்புலட்சுமி, சேத்தன் கடம்பி, கவிதாலயா கிருஷ்ணன், முரளி மோகனன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

Viji Chandrasekhar with her daughter Lovelyn
எடிட்டிங் பிரேம் குமார். ஜிப்ரான் இசை. ஒளிப்பதிவு க்ரிஷ்ணாசேகர். இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை நேற்று இயக்குனர் சமுத்திரக்கனி வெளியிட்டுள்ளார்.
Thank you so much Sir?? https://t.co/iM6QWias1k
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) October 28, 2018

House Owner
சென்னையில் மழை, வெள்ளம் சமயத்தில் நடக்கும் காதல் கதை போல் திரைக்கதையை அமைத்துள்ளதாக கிசுகிசுக்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.
