Videos | வீடியோக்கள்
நாமினேஷனில் இருந்து தப்பிக்க போராடும் ஹவுஸ் மேட்ஸ்.. போட்டியாளர்களை திருப்பி அடிக்கும் கர்மா

அந்த கிரீஸ் டப்பாவ எப்படி எட்டி உதைச்ச என கவுண்டமணி ஒரு படத்தில் செந்திலைப் பார்த்து கேட்பார். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது பிக் பாஸ் வீட்டில் நடந்துள்ளது. அதாவது இந்த வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிக்க போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி போட்டியாளர்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் தங்கள் வாழ்க்கையில் நடந்த முக்கிய பகுதிகளை கூற வேண்டும். அப்படி கூறும் பட்சத்தில் மற்ற போட்டியாளர்களால் பஸ்ஸர் அடிக்கப்பட்டு விட்டால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். இதுதான் பிக்பாஸ் அறிவித்த விதிமுறை.
Also read : பிக்பாஸ் சீசன் 6 ஆண் போட்டியாளர்கள் வாங்கும் ஒரு நாள் சம்பளம்.. முதல் இடத்தில் இருக்கும் பிரபலம்
அந்த வகையில் கடந்த இரு நாட்களாக அனைவரும் கதைகளை கூறி வருகின்றனர். அதில் சிலரின் கதைகள் நிராகரிக்கபட்டது. அதைத்தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரட்சிதா, ஆயிஷா உள்ளிட்ட அனைவரும் பேச ஆரம்பிக்கின்றனர்.
ஆனால் மற்ற போட்டியாளர்கள் அவர்களை பேசவிடாமல் பட்டனை அழுத்தி தடுத்துக் கொண்டே இருக்கின்றனர். இதில் கடைசியாக வந்த விக்ரமன் நான் 11 வது படிக்கும்போது என்று ஆரம்பித்தார். உடனே திமு திமுவென ஓடி வந்த ஹவுஸ் மேட்ஸ் பட்டனை தட்டி அவரை நிராகரித்தனர். இதனால் அவர் ஏமாற்றத்துடன் வெளியில் வந்தார்.
Also read : பிக்பாஸ் வீட்டில் ஆரம்பித்த முதல் காதல்.. 2 பேருக்கு ரூட் போடும் சக போட்டியாளர்
இதுதான் தற்போது சோசியல் மீடியாவில் கலாய்க்கப்பட்டு வருகிறது. ஏனென்றால் இதற்கு முந்தைய நாட்களில் யாராவது பேச ஆரம்பித்தாலே முதல் ஆளாக ஓடி சென்று பட்டனை தட்டியது விக்ரமன் மட்டும்தான். அதைத்தான் தற்போது ரசிகர்கள் வாழ்க்கை ஒரு வட்டம், கர்மா திருப்பி அடித்து விட்டது என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.
மேலும் வீட்டின் தலைவரான ஜி பி முத்து இப்பதானே அவன் பேச ஆரம்பித்தான், கையும் தட்டுறீங்க, பட்டனையும் தட்டுறீங்க, யாருப்பா நீங்க என்று குழம்பி போய் பேசிக் கொண்டிருந்தார். இதை கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கலகலவென சிரிக்கும் படி ப்ரோமோ முடிந்துள்ளது. தன்வினை தன்னைச்சுடும் என்பது போல விக்ரமன் இந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவராமல் சிரித்தபடி சமாளித்து கொண்டிருந்தார். அந்த வகையில் இன்றைய எபிசோட் களைக்கட்டும் என்று தெரிகிறது.
