முக்கிய இரண்டு தமிழ் படங்களை வளைத்துப் போட்ட ஹாட்ஸ்டார்.. அதுல ஒண்ணு பெரிய பட்ஜெட் படம்!

சமீபகாலமாக ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் ஹாட்ஸ்டார் தன்னுடைய அடுத்த கட்ட ஆட்டத்தை தொடங்கிவிட்டது.

இதுவரை ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான படங்களில் மூக்குத்தி அம்மன் படம் மட்டுமே எதிர்பார்த்த அளவு அவர்களுக்கு நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுத்தது. அவனைத் தவிர வெளியான மற்ற அனைத்து தமிழ் படங்களுமே சுமாரான வரவேற்பை பெற்றது.

இதனை மாற்ற வேண்டும் என்பதற்காக தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் டாக்டர் படத்தை பல கோடி கொடுத்து வாங்கியுள்ளது ஹாட் ஸ்டார் நிறுவனம். மேலும் இந்த படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் எனவும் ஒரு தகவல் உள்ளது.

doctor-direct-ott-release
doctor-direct-ott-release

இது ஒருபுறமிருக்க காமெடி ஹீரோக்களில் முக்கியமானவராக கருதப்படும் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியிருக்கும் இடியட் என்ற படத்தையும் ஹாட் ஸ்டார் நிறுவனம் வாங்கி விட்டது. இந்த படத்தை சந்தானத்திற்கு தில்லுக்கு துட்டு என்ற வெற்றி படங்களை கொடுத்த ராம்பாலா இயக்கியுள்ளார்.

idiot-hotstar
idiot-hotstar

இந்த இரண்டு படங்களையும் சமீபத்தில் பார்த்த ஹாட்ஸ்டார் நிறுவன உரிமையாளர்கள் இந்த படங்களை தங்கள் வசப்படுத்தி விட்டார்களாம். இந்த இரண்டு படங்களுமே சூப்பராக வந்திருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.

இதில் சிவகார்த்திகேயன் படம் தியேட்டரில் தான் வெளியாக வேண்டும் என அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கதறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் படம் கைமாறி பல நாள் ஆகிவிட்டது என்பதை மவுனத்தின் மூலம் சொல்லாமல் சொல்லிவிட்டது படக்குழு.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்