fbpx
Connect with us

Cinemapettai

கல்யாணத்துக்கு மாப்பிள்ளை கிடைக்காமல் அல்லாடும் குதிரை நடிகை.. எல்லாத்துக்கும் அந்த நடிகர் தான் காரணமாம்!

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema Kisu Kisu

கல்யாணத்துக்கு மாப்பிள்ளை கிடைக்காமல் அல்லாடும் குதிரை நடிகை.. எல்லாத்துக்கும் அந்த நடிகர் தான் காரணமாம்!

தெலுங்கு சினிமாவில் முரட்டுக் குதிரை நடிகையாக வலம் வந்தவர் தான் அந்த நாயகி. நல்ல உயரமும் கொழுக் மொழுக் தேகமும் இருந்ததால் முதல் படத்திலேயே விருவிருவென முன்னேற ஆரம்பித்துவிட்டார்.

தமிழில் முதல்முறையாக அந்தநாயகி நடித்த படம் சரியாக போகவில்லை. இருந்தாலும் அந்த நடிகையின் ரொமான்ஸ் பாடல் ஒன்று பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. பிகினியில் சக்கபோடு போட்டிருந்தார்.

விளைவு உடனடியாக அனைத்து தயாரிப்பாளர்களும் அந்த நாயகியை மொய்க்க ஆரம்பித்துவிட்டனர். படபடவென சொத்துகளைச் சேர்க்க ஆரம்பித்தார் அந்த நாயகி. இடையில் ரியல் எஸ்டேட் பிசினஸ் கூட செய்தாராம்.

ஒரு பாழாப்போன படத்திற்காக உடல் எடையை ஏற்றி குறைக்க முடியாமல் தடுமாறி வந்தார் அந்த நாயகி. அதுமட்டுமில்லாமல் சரித்திர படம் என்றாலே இவர்தான் நாயகி என அனைவர் மனதிலும் இடம்பிடித்தார்.

சமீபத்தில் ஒரு சரித்திரப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த படத்தின் நாயகனுக்கும் இவருக்கும் ஒரு ரொமான்ஸ் கதை உருவானது. ஏற்கனவே ஏற்பட்டு பிரிந்து போய் இருந்த அந்த உறவு மீண்டும் வலுவானது.

ஆனால் அந்த நடிகர் இந்த நடிகையை திருமணம் செய்யமாட்டேன் என ஒற்றைக்காலில் இருக்கிறாராம். எல்லாம் முடித்து விட்டு இப்படி சொன்னால் என்ன அர்த்தம் என புலம்பினாராம் அந்த நாயகி.

பிறகு தனது குடும்பத்தினரிடையே அந்த பொறுப்பை ஒப்படைத்து விட்டாராம். அவர்களும் பல மாப்பிள்ளைகள் பார்த்தும் நாயகிக்கு ஒருவரைக்கூட பிடிக்கவில்லையாம். அதுக்கு அந்த நாயகன் தான் காரணம் எனவும் கூறுகின்றனர்.

அந்த நாயகனை மறக்க முடியாமல் அந்த நாயகி இப்படி செய்து கொண்டிருக்கிறார் என புலம்புகிறார்கள். முதலில் உடல் எடையை குறைத்து விடுவோம் என உயிரை கொடுத்து உடற்பயிற்சி செய்து வருகிறாராம்.

Continue Reading
To Top