India | இந்தியா
கலப்பு திருமணத்தினால் கொலை.. பெண்ணின் தந்தை உயிருடன் எரித்தார்

மகாராஷ்டிரா நிஹ்லோஜ் கிராமத்தை சேர்ந்த சேர்ந்த ராணா சிங், ருக்மணி இருவரும் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இதனால் இருவரும் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோரை பார்ப்பதற்காக ருக்மணி தனியாக தாய் வீட்டிற்கு வந்து இருக்கிறார். மே 1ஆம் தேதி அவருடைய கணவரான ராணா சிங் அங்கு மனைவியை அழைத்து செல்வதற்காக வந்திருக்கிறார். உடனே பெண்ணின் தந்தை இருவரையும் ரூமில் போட்டு அடைத்துவிட்டார்.
சிறிது நேரம் கழித்து பெண்ணின் தந்தையும் அவருடைய உறவினரும் ரூமில் உள்ளவர்களை தீயில் கொளுத்தி கொலை செய்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்குள் பெண்ணின் தந்தையும் அவருடைய உறவினரும் இருவரும் தலைமறைவாயினர். ருக்மணியின் உறவினர் சுரேந்திர குமாரை போலீசார் கைது செய்துள்ளனர் மற்றவர்களின் தேடும் பணி நடந்து வருகிறது.
