ஹாலிவுட்டையே மிரளவைத்த 5 தமிழ்படங்கள்.. ராபின் ஹூட்டாய் சூப்பர் ஸ்டார் செய்த ரகளை

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் சில சுவாரசியமான சினிமா தகவல்களை தொடர்ந்து கண்டு வருகிறோம். தமிழ் சினிமாவில் அதிகம் காணக் கிடைப்பது காதல் கதைகளே. காதல் திரைப்படங்கள் மினிமம் கேரண்டி என்பதால் அவ்வகை திரைப்படங்கள் எப்போதும் புழக்கத்தில் இருக்கும். ஆனால் இந்தக் கதைகளையும் தாண்டி ஆங்கில படத்திற்கு இணையான மன ரீதியான “ஸ்பிலிட் பெர்சனாலிட்டி” எனப்படும்  கதைகளை எடுத்து அசத்திய  படங்களை இதில் பார்க்கலாம்

சந்திரமுகி: மலையாளத்தில் மோகன்லால், ஷோபனா மற்றும் பலர் நடிக்க மாபெரும் வெற்றி பெற்ற மணிச்சித்ரதாழ் என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்தான் சந்திரமுகி. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர். மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார் பி வாசு. கதைப்படி ஸ்பிளிட் பர்சனாலிட்டி என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஜோதிகா எப்படி சந்திரமுகி யால் பாதிக்கப்பட்டார் என்பதும் சந்திரமுகியின் கதை என்ன என்பதும் பிற்பாதியில் விறுவிறுப்பாக சொல்லப்பட்டிருக்கும். ஐநூறு நாட்களுக்கு மேல் ஓடி இந்த திரைப்படம் மாபெரும் சாதனை புரிந்தது.

நான் சிகப்பு மனிதன் (1985): இந்தப் படம் ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று. இது ஸ்பிலிட் பெர்சனாலிட்டி படம் என்று சொல்ல முடியாது, ஆனால் ரஜினி பகலில் கல்லூரி ஆசிரியராகவும், இரவில் கொடியவர்களை வேட்டையாடும் ராபின் ஹுட்டாகவும் இந்தப்படத்தில் அசத்தியிருப்பார்.

அந்நியன்: சீயான் விக்ரம் நடிப்பில் ஷங்கர் இயக்க அசத்தலான வெற்றியை பதிவு செய்த திரைப்படம் அந்நியன். இந்த திரைப்படத்தில் விக்ரம் அவளுக்கு சிறுவயதில் ஏற்பட்ட நிகழ்வு காரணமாக மல்டிபிள் பர்சனாலிட்டி நோய் ஏற்படுகிறது. தன்னைத் தானே இரண்டு வேறு மனிதர்கள் போல சித்தரித்துக் கொள்கிறார். அப்படி அவர் சித்தரித்த ஒரு கதாபாத்திரம் தான் அந்நியன். சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்களை தண்டிக்கும் கதாபாத்திரம் இது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் எல்லாம் மாபெரும் ஹிட் ஆனது.

நான் சிகப்பு மனிதன்: விஷால், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க இயக்குனர் திரு இயக்கிய படம் நான் சிகப்பு மனிதன். இந்த திரைப்படத்தில் விஷால் அவர்களுக்கு திடீர் திடீரென்று தூக்கம் வரும் வியாதி. அவர் எப்போது தூங்குவார் என்பது அவருக்கே தெரியாது. அவருடைய இந்த நிலையால் தனது காதல் மனைவி கோமா நிலைக்கு செல்லப்படுகிறார். அதற்கு காரணமானவர்களை பழிவாங்க விஷால் செய்யும் ஆக்சன் அவதாரமே படத்தின் பிற்பாதி. சுமாரான வெற்றியை பதிவு செய்த இந்த திரைப்படத்திற்கு இசை ஜிவி பிரகாஷ்.

3: தனுஷ், சுருதி ஹாசன், பிரபு மற்றும் பலர் நடித்த திரைப்படம் 3. இந்த திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அனிருத் அறிமுகமானார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் தனுஷ் பைபோலார் டிஸ்ஆர்டர் என்கிற மனநோயால் பாதிக்கப்பட்டவர் ஆக வருவார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதீத கோபத்திற்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாவார்கள். இது முற்றிப் போகும்போது தற்கொலை செய்து கொள்ளவும் செய்வார்கள். இந்தத் தன்மையை இந்தப்படத்தில் அருமையாக படம்பிடித்துக் காட்டி இருந்தார் இயக்குனர். நல்ல வெற்றியைப் பதிவு செய்த இந்த திரைப்படம் அப்போது ட்ரெண்டிங்கில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்