Connect with us
boomerang-movie

ஹாலிவுட்டையே அசரவைத்த டாப் 10 பலான காட்சிகள்!

News | செய்திகள்

ஹாலிவுட்டையே அசரவைத்த டாப் 10 பலான காட்சிகள்!

10. Monster’s Ball (2001)

Monster’s Ball

Billy Bob Thornton மற்றும் Halle Berry நடிப்பில் வெளிவந்த படம் இது. Hank, Leticia என்னும் கதாபாத்திரத்தில் நடித்த இவர்கள் காட்சிப்படி தங்கள் எண்ணங்களையும், சுய வேதனைகளையும் பகிர்ந்துகொள்கின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் இணைவது போன்ற காட்சி தத்ரூபமாக அமைக்கப்பட்டிருக்கும்.

9. The Notebook (2004)

The Notebook

சிறுவயது முதல் பழகி வரும் Noah மற்றும் Allie இருவரும் ஒரு மழையினில் தங்கள் காதலை வெளிக்கொண்டு இணைவது போன்ற காட்சி. கதைப்படி ஹீரோயினான Allieக்கு தமிழ் சினிமா போல் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அப்போது கதாநாயகனுடன் நிகழும் இந்த காட்சி எமோஷன் நிறைந்த காதல் காட்சியாக பலரால் வெகுவாக பேசப்பட்டது.

8. Black Swan (2010)

Black Swan

Nina, Lily என்னும் இரு தோழிகளுக்குள் நிகழும் காட்சி இது. படத்தின் இயக்குனரான Darren Aronofsky இந்த ஒரு காட்சியை தத்ரூபமாகவும் காண்போரின் படபடப்பை கூட்டவும் வித்யாசமான லைட்டிங், மேக் அப், காமிரா ஷாட்ஸ் போன்றவற்றை பயன்படுத்தி இருப்பார். சீட்டின் நுனிக்கு இந்த காட்சி ரசிகர்களை கொண்டுவந்ததாக படம் வெளியானபோது பல விமர்சனங்கள் எழுந்தன.

7. Atonement (2007)

Atonement

Robbie என்னும் கதாநாயகன் ஹீரோயினான Ceciliaவிற்கு சூடான கடிதத்தை எழுதுகிறான், இதை படித்த Cecilia நூலகத்தில் Robbieயுடன் இணைவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

6. Irreversible (2002)

Irreversible

Alex மற்றும் Marcus இருவரும் ஒரு பார்டிக்கு செல்கிறார்கள். செல்வதற்கு முன் இருவரும் இணைவது போன்ற காட்சி இது. இதே படத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக ஒரு மூர்க்கம் மிகுந்த வன்புணர்ச்சி காட்சியும் உண்டு. அக்கற்பழிப்பு காட்சியை கண்கலங்காமல் பார்ப்பது கடினமே. அந்த அளவிற்கு கொடூரமான காட்சி அது. மோனிகா பெல்லுசி இந்த படத்தில் பிரம்மாதமாக நடித்திருப்பார்.

5. Broken Embraces (2009)

Broken Embraces

சற்று வயது முதிர்ந்த கதாநாயகனான Mateoக்கும் Lenaவுக்கும் இடையிலான காதல் காட்சி இது. இக்காட்சியில் சுற்றி இருக்கும் அணித்து பொருட்களும் கலர்புல்லாக அமைந்திருக்கும். அதே போல் இருவரின் உடை காதல் காட்சிக்கு வலுசேர்க்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும்.

4. Carol (2015)

Carol

ஒரு விவாகரத்தான பெண்ணுக்கும், ஒரு புகைப்படக் கலைஞரான பெண்ணிற்கும் இடையேயான காதல் பற்றிய படம் இது. ஒரு சுற்றுலாவிற்கு சென்றவிடத்தில் இருவரும் ஒரு தாங்கும் விடுதியில் இணைவது போன்ற காட்சி இப்படத்தில் இடம்பெற்றிருக்கும்.

3. Malena (2000)

Malena

போர்கால சூழ்நிலையில் ஒரு பதின்வயது வாலிபன் திருமணமான ஒரு பெண் மீது மோகம் கொள்வதை போன்ற படம் இது. முற்பாதியில் கவர்ச்சியிலும் பிற்பாதியில் நம்மை பரிதாபப்படவும் வைத்திருப்பார் கதாநாயகி மோனிகா பெல்லுசி.

2. Blue is the Warmest Colour (2013)

Blue is the Warmest Colour

இந்த படத்தை பலர் அறிந்திருக்க கூடும், Abdellatif Kechiche இயக்கத்தில் வெளிவந்த இந்த படத்தில் Adele என்னும் பெண் நீல நிற தலை முடியுள்ள ஒரு பெண்ணிடம் காதல் கொள்கிறார். இவர்கள் இருவரும் இணைவது போன்ற காட்சி சுமார் ஆறு நிமிடங்கள் எந்த கட்டும் இல்லாமல் தொடர்ச்சியாக வரும். இப்படம் உலகம் முழுதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது மறுக்க இயலாதது.

The Reader (2008)

reader

நம் டைடானிக் ஹீரோயின் Kate Winslet நடித்த திரைப்படம். 15 வயது கொண்ட Michael க்கும் அவன் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகில் வசிக்கும் Hanna Schmitz இடையே நிகழும் காதல் பற்றிய கதை இது. ஒவ்வொரு முறை இருவரும் இணைந்த பின்னர் கதாநாயகி அந்த இளைஞனை படிக்குமாறு வற்புறுத்துகிறாள். கதாநாயகியின் முன்னாள் வாழ்க்கை இருவரையும் எவ்வாறு பிரிக்கிறது என்பதே கதை. டைட்டானிக்கில் அழகால் வசீகரித்தவர் இந்த படத்தில் நடிப்பால் வசீகரித்திருப்பார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top