அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தெறி படத்தில் மெயின் வில்லனாக நடிப்பவர் டைரக்டர் மகேந்திரன். என்றாலும், அவர் வசன காட்சிகள் மூலம்தான் வில்லனாக மிரட்டுகிறாராம். கதைப்படி முக்கிய குற்றவாளியான அவரை விஜய் நெருங்கவே பல தடைகளைத்தாண்டிதான் செல்வாராம். அப்படி தடைகளாக இருக்கும் வில்லன்கள் அப்படத்தில் பலர் இருக்கிறார்களாம். அதில் க்ளைமாக்ஸில் நடித்திருக்கும் வில்லன்தான் ஹாலிவுட் நடிகர் போலோ.

இவர் ஹாலிவுட்டில் குறைவான படங்களில்தான் நடித்திருக்கிறாராம். ஆனால் ரியல் பைட்டராம். ஆக்சன் காட்சிகளில் தனக்கு அதிகமான வேலை இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிப்பாராம். அந்த வகையில், தெறி படத்தில் பிரமாண்டமான சண்டை காட்சி என்று சொன்னதை அடுத்துதான் நடிக்க ஓகே சொன்னாராம். அதோடு, அவர் நடித்த ஒரேயொரு சண்டை காட்சியை மட்டும் பத்து நாட்கள் படமாக்கியிருக்கிறார்களாம்.

அந்த வகையில், விஜய்யுடன் ரியல் பைட்டர் போலோ மோதும் சண்டை காட்சிக்காக மட்டுமே பிரமாண்டமான செட் அமைத்தார்களாம். அதோடு, மற்ற வில்லன் நடிகர்களெல்லாம் டூப் நடிகர் வைத்துக்கொள்ளும் நிலையில், இவரோ உயரத்தில் இருந்து குதிக்கக்கூட டூப் வேண்டாமென்று தானே குதித்து நடித்தாராம். மேலும், ஹாலிவுட் பைட்டரான போலோவுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுக்க தயாராக இருந்தபோதும் ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் மட்டுமே அவர் வாங்கினாராம். அந்த வகையில், தெறி படத்துக்காக விஜய்யுடன் 10 நாட்கள் சண்டை காட்சியில் நடித்திருக்கிறார் போலோ.