தொழில் அதிபரும், சினிமா பைனான்சியருமான டாரில் காட்ஸ் உடலுறவுக்கு சம்மதித்தால் தனக்கு கோடிக் கணக்கில் பணமும், பட வாய்ப்பும் தருவதாகக் கூறியதாக பிரேசிலை சேர்ந்த மாடலும், நடிகையுமான கிரீஸ் சான்டோ புகார் தெரிவித்துள்ளார்.


பிரேசிலை சேர்ந்தவர் க்ரீஸ் சான்டோ. மாடல், நடிகை. ஜேன் தி வெர்ஜின் ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். அவர் போட்டோஷூட்டுக்காக அமெரிக்காவில் உள்ள ஹவாய்க்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் கோடீஸ்வரரும், சில்வர் பிக்சர்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தின் பைனான்சியருமான டாரில் காட்ஸின் அறிமுகத்திற்காக அவரின் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.ஹோட்டல் அறையில் வைத்து க்ரீஸ் டாரிலை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது தன்னுடன் படுக்கைக்கு வந்தால் கோடிக் கணக்கில் பணமும், ஹாலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பும் அளிப்பதாக டாரில் கூறியதாக க்ரீஸ் புகார் தெரிவித்துள்ளார்.என் வாழ்க்கையை மாற்றும் அளவுக்கு பெரிய பட வாய்ப்பு வாங்கித் தருவதாக டாரில் கூறினார். அதன் பிறகு பணம் தருவதாக கூறினார் என்று கூறிய க்ரீஸ் டாரில் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

நான் கோடிக் கணக்கில் பணம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறேன். இது உனக்கும், உன் குடும்பத்தாருக்கும் பேருதவியாக இருக்கும். நீங்கள் கஷ்டப்படவே தேவையில்லை. என்னுடன் படுக்கைக்கு வந்தால் இது எல்லாம் கிடைக்கும் என்றார் டாரில். நான் மறுப்பு தெரிவித்து அங்கிருந்து கிளம்பிவிட்டேன் என க்ரீஸ் கூறியுள்ளார்.க்ரீஸ் தெரிவித்துள்ள புகாரை டாரில் தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது. டாரில் க்ரீஸை படுக்கைக்கு அழைக்கவே இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.