ரஜினியின் கபாலி தான் இப்போது அனைவரும் எதிர்ப்பார்க்கும் படம். ஒவ்வொரு நாளும் படம் எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வருகிறது.இப்படம் வரும் ஜுலை 22ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த நாளில் இந்தியாவில் எந்த முக்கிய நடிகர்களின் படமும் வெளியாகவில்லையாம்.தமிழிலும் கபாலி தவிர எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை என்று உறுதியாகிவிட்டது.

எனவே சோலோவாக களமிறங்கியுள்ளார் ரஜினி.அதேபோல் இந்தியாவில் குறிப்பாக தமிழில் வெளியாகவுள்ள ஹாலிவுட் படங்களின் ரிலீஸ் தேதியும் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.