Connect with us
Cinemapettai

Cinemapettai

கார்த்தியின் கைதி பர்ஸ்ட் லுக் போஸ்டரை அட்ட காப்பி அடித்த ஹாலிவுட் படம் எது தெரியுமா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கார்த்தியின் கைதி பர்ஸ்ட் லுக் போஸ்டரை அட்ட காப்பி அடித்த ஹாலிவுட் படம் எது தெரியுமா?

2019 இல் கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கைதி. கார்த்தியின் சினிமா கேரியரில் 100 கோடி வசூல் செய்த படமாகவும் அமைந்தது. அந்த நேரத்தில் வெளியான விஜய்யின் பிகில் படத்தை விட அதிக பாராட்டையும் பெற்றது.

இப்படத்தின் ரிமேக் உரிமை வாங்க அந்தநேரத்தில் நீ நான் என போட்டியும் நடந்தது. இரண்டாம் பார்ட் அறிவிப்புக்காக அனைவரும் வைட்டிங். பலர் இப்படத்தை லோகேஷ் அமெரிக்க படமான Assault on Precinct 13 பார்த்து இன்ஸ்பயர் ஆகி எடுத்தார் என்று கூட அந்த சமயத்தில் சொன்னார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் கைதி படம் டிவியில் ஒளிபரப்பானது. அந்த நேரத்தில் தான் கைதி பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை காப்பியடித்த ஹாலிவுட் படம் பற்றிய விஷயம் ட்விட்டரில் பரவ ஆரம்பித்தது.

2020ல் வெளியான படம் akilla’s escape, சார்லஸ் ஆஃபீசர் இயக்கிய படம். இதுவும் கஞ்சா, கேங்ஸ்டர் என அதே ஆக்ஷன் ட்ராமா ஜானர் படம் தான். இந்த போஸ்டர் தான் அப்படியே உள்ளதாக பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

kaithi poster inspired

உலகளவில் நல்ல வரவேற்பை இப்படம் பெற்றுள்ளது. இந்த டீம் நம் கைதி போஸ்டரை பார்த்து ரெடி செய்தனரா அல்லது ஏதேச்சையாக நடந்ததா என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top