Connect with us
Cinemapettai

Cinemapettai

vikram-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

4 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த விக்ரம் படத்தை காப்பியடித்த ஹாலிவுட்.. வழக்கமா நம்ம தான் காப்பி அடிப்போம்?

ஹாலிவுட் படங்களை காப்பி எடுத்து தமிழ் சினிமாவில் படமெடுத்த காலம் போய் தற்போது ஹாலிவுட் படங்கள் தமிழ் சினிமாவை காப்பியடித்து எடுக்க வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது போல.

அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் திறமையான இளம் இயக்குனர்கள் பலர் உருவாகிக் கொண்டிருக்கின்றன. புது புது கதைகள் உடன் புதுப்புது சிந்தனைகளுடன் வெரைட்டியான படங்கள் நமக்கு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்த இருமுகன் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. அதிலும் லவ் என்ற திருநங்கை கதாபாத்திரம் வேற லெவல் வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் நித்யா மேனன் போன்றோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 40 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் பெரிய அளவில் வசூலை குவித்தது. இந்த படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்கியிருந்தார்.

தற்போது ஹாலிவுட்டில் விக்ரமின் இருமுகன் படத்தின் கதையை அப்படியே காப்பியடித்து பிராஜக்ட் பவர் எனும் படத்தை உருவாக்கி உள்ளதாக தெரிகிறது.

இருமுகன் படத்தில் ஒரு மருந்தை எடுத்துக் கொண்ட பின்னர் ஹீரோவின் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். அதேபோல்தான் ஹாலிவுட்டில் உருவாகியுள்ள பவர் பிராஜக்ட் எனும் படத்திலும் ஒரு மாத்திரையை பயன்படுத்தியவுடன் சூப்பர் ஹீரோவாக மாறி விடுவார் ஹீரோ.

இதனால் இந்த படத்தின் மீது இருமுகன் படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீம்ஸ் வழக்குப் போட உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

வழக்கமா நம்ம ஆளுங்கதான் ஹாலிவுட்டில் காப்பி அடிப்பார்கள், இது என்ன புதுசா இருக்கு.

Continue Reading
To Top