ராஜமௌலி பட நடிகையை தட்டி தூக்கிய சிவகார்த்திகேயன்.. அதிர்ச்சியான திரையுலகம்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் வரிசையில் இடம் பெற்று பிரபலமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் தற்போது டான் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதை தொடர்ந்து அவர் அடுத்து தன்னுடைய 20வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் தற்போது SK20 என்று அழைக்கப்பட்டு வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிகர் சத்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

மேலும் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக யார் நடிப்பார்கள் என்ற ஆர்வம் அவரது ரசிகர்களிடையே இருந்தது. இந்நிலையில் பாலிவுட் ஹீரோயின் ஒலிவியா மோரிஸ், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக சிவகார்த்திகேயன் முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்று பல முயற்சிகளை செய்து வருகிறார்.

அவருடைய டாக்டர் படத்தின் 100 கோடி சாதனைக்கு பிறகு இந்த முயற்சி இன்னும் அதிகமாகி இருக்கிறது. மேலும் சினிமாவில் மார்க்கெட் இருக்கும் போதே தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சிவகார்த்திகேயன் நினைக்கிறார்.

அதனால்தான் அவர் வெளிநாட்டு நடிகையை தனக்கு ஜோடி ஆக்கியுள்ளார். இப்படி இருந்தால்தான் பெரிய நடிகர்களுக்கு இணையாக இருக்கும் என்று அவர் கணக்குப் போட்டு உள்ளார். தற்போது சிவகார்த்திகேயனின் படங்கள் முன்னணி நடிகர்களுக்கு இணையான வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்