பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ட்வெய்ன் ஜான்சனுடன் சேர்ந்து நடித்த ஹாலிவுட் படம் பே வாட்ச். படம் அமெரிக்காவில் ரிலீஸாகியுள்ளது. வரும் ஜூன் 2 ஆம் தேதி இந்தியாவில் ரிலீஸாகவுள்ளது.

இந்த படத்தை குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்க வேண்டாம் என்று பிரியங்கா சோப்ரா வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், பலரும் இதெல்லாம் ஒரு படமா? திறமைசாலிகள் இருந்தும் அவர்களை பயன்படுத்தவில்லை என விமர்சித்து உள்ளனர்.

இந்த படத்தின் தயாரிப்பாளர் இந்த படம் குறித்து கூறுகையில், இந்த படம் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிப்பது உறுதி என்று கூறியது குறிப்பிடத்தக்கது.