விஜய்யின் புகழ் தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, மலையாளம் போன்ற சினிமா ரசிகர்களிடம் பரவி இருப்பது நமக்கு தெரியும். அங்கு இருக்கும் விஜய் ரசிகர்களும் அவர் படம் வந்தால் போதும் திருவிழா போல் கொண்டாடுவார்கள்.

இந்நிலையில் Lake Of Fire என்ற ஹாலிவுட் படத்தை இயக்கி இருக்கிறார் ராஜ்திருசெல்வன். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அஜித்தை வைத்து ஒரு அரசியல் சார்ந்த கதையை இயக்க ஆசைப்படுவதாகவும், அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். இதனை நாம் ஏற்கெனவே கூறியிருந்தோம்.

தற்போது அவருக்கு விஜய்யை வைத்து ஒரு குடும்ப பாங்கான காதல் கதையை இயக்க ஆசைப்படுவதாக தெரிவித்திருக்கிறார். விஜய் நடிப்பில் முழுக்க முழுக்க ஹாலிவுட் படமாக ஆங்கிலத்தில் இந்த படத்தை இயக்கவுள்ளேன். தமிழில் விஜய் எத்தனையோ சாதனை செய்துவிட்டார், அவரை ஹாலிவுட்டிலும் சாதனை செய்ய அழைத்து செல்வேன் என கூறியுள்ளார்.