மறைந்த பிக்பாஸ் டைட்டில் வின்னர் சித்தார்த் குறித்த நெகிழ்ச்சியான பதிவு.. பிரபல ஹாலிவுட் ஹீரோ ஜான் சீனா

ஹிந்தி பிக்பாஸ் சீசன் 13ல் பங்கேற்றது மட்டுமல்லாமல் டைட்டில் வின்னர் ஆக மாறியதன் மூலம் பிரபலமானவர் தான் பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லா. இவர் ஒரு சில படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளம் சித்தார்த் சுக்லாவிற்கு கிடைத்தது.

இவர் 1980 டிசம்பர் 12ஆம் தேதி பிறந்துள்ளார். தமிழில் ‘மண்வாசனை’ என்ற நெடுந்தொடரில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தாத் சுக்லாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சித்தார்த் சுக்லா, ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக, அதிர்ச்சித் தகவலை மருத்துவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவருடைய மறைவு பாலிவுட் மட்டுமல்லாமல் திரைத்துறை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் 40 வயதான சித்தார்த் சுக்லாவின் மறைவு திரையுலகில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. அவரது குடும்பமும் ஆறாத் துயர் அடைந்துள்ளனர். இந்த செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா என பலரும் ஏங்கித் தவித்தனர்.

john-cena
john-cena

இவருடைய மறைவிற்கு அரசியல் முதல் சினிமா பிரபலங்கள் என சமூக வலைதளங்களில் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். அத்துடன் WWE குத்துச்சண்டை வீரரும், ஹாலிவுட் ஹீரோவுமான ஜான் சீனா இணைய பக்கத்தில்,

‘சித்தார்த் சுக்லா ஈகோ இல்லாத நடிகர்’ என்று தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இவரைப்போலவே பிரபலங்கள் பலரும் சித்தார்த் சுக்லாவின் திடீர் மரணத்திற்கு வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்