Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோலிவுட்டை கலக்கியது மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் மாஸ் காட்டும் இயக்குனர்கள்

கோலிவுட்டில் சில இயக்குனர்கள் தான் முத்திரை பதிக்கும் கதைகளை எடுத்து சாதனை செய்வர். அவர்களுக்கு எப்போதுமே கிரேஸ் இருந்து கொண்டே தான் இருக்கும். இவர்களுக்கு கோலிவுட்டில் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் சிகப்பு கம்பள வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதில் சில குறிப்பிடத்தக்க தமிழ் இயக்குனர்கள் யார் என நாம் தெரிந்து கொள்வோமே…

கமல்ஹாசன்:

நடிப்பில் மட்டுமல்ல இயக்கத்திலும் உலக நாயகன் தான். இவரின் இயக்கத்தில் வெளியான முதல் இந்தி படம் சாச்சி 420. அதை தொடர்ந்து, தமிழகத்தில் பெரும் எதிர்ப்பை சந்தித்த விஸ்வரூபம். இந்தியில் விஸ்வரூப் என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து, சபாஷ் நாயுடு படத்தை சபாஷ் குண்டு என்ற பெயரில் உருவாக்கி வருகிறார். இந்தி திரையுலகம் பெரிய மார்க்கெட் என்பதால் படங்களை இரு மொழிகளிலும் இயக்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.

மணிரத்னம்:

கோலிவுட்டின் ரத்னக்கல் என புகழப்படும் இவர் 1998ம் ஆண்டே பாலிவுடிலும் தனது முத்திரையை பதித்தவர். இவரின் ரோஜா மற்றும் பாம்பே படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. பெரும் வரவேற்பை பெற்ற இப்படங்களால் பாலிவுட் வெற்றி இயக்குனர்கள் பட்டியலில் மணிரத்னம் பெயரும் அடிப்பட்டது. இதையடுத்து, ஷாருக்கான் மற்றும் மனிஷா கொய்ராலாவை வைத்து தில் சே படத்தை இயக்கினார். இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, குரு, யுவா மற்றும் ராவண் படங்களை இந்தி மற்றும் தமிழில் இயக்கினார். அதை தொடர்ந்து, இந்தியில் வெற்றி பெற்ற ஒகே ஜானு படத்தை ஓ காதல் கண்மணி என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தார்.

பிரபுதேவா:

தமிழ் சினிமாவில் பல அவதாரம் எடுத்தவர் பிரபுதேவா. முதலில் டான்சராக இருந்தவர். நடன இயக்குனராக மாறினார். தொடர்ந்து, நடிகராக சில வெற்றி படங்களை நடித்தார். இதை தொடர்ந்து, தளபதி விஜயை வைத்து போக்கிரி படத்தை இயக்கினார். அப்படம் மாஸ் ஹிட் அடித்ததை தொடர்ந்து இயக்குனராகவும் ஜொலித்தார். தமிழ் மற்றும் தெலுங்கில் மட்டும் படம் இயக்கி கொண்டு இருந்தவர்.

பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து வாண்டட் படத்தை இயக்கினார். போக்கிரி படத்தின் ரீமேக் என்பதாலும், சல்மான்கான் என்ற ஆளுமையால் படம் மாஸ் ஹிட். இதை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில்ல், ரௌடி ரத்தோர், ராமையா வஸ்தாவையா, ஆர்…ராஜ்குமார், ஆக்‌ஷன் ஜாக்சன் மற்றும் சிங் இஸ் பிலிங் உள்ளிட்ட படங்களை இயக்கினார். பல நாள் இடைவேளைக்கு பிறகு சல்மான்கானை வைத்து டாபாங் 3 இயக்க இருப்பதாக தெரிகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ்:

விஜயிற்காக படம் பண்ணுவதில் அதிக சிரத்தை எடுப்பவர். சூர்யா நடிப்பில் வெளியான கஜினி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பாலிவுட் பக்கம் சென்றார். அமீர்கான் நடிப்பில் வெளியான இப்படம் பெரும் ஹிட் அடித்தது. உலகளாவிய பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை படைத்த இந்திய படம் என்ற சாதனையை செய்தது. இதை தொடர்ந்து, இந்தியின் சிறந்த இயக்குனராக அறியப்பட்டார். இதை தொடர்ந்து, துப்பாக்கி படத்தை ஹாலிடே என்ற பெயரிலும், மௌன குரு படத்தை அகிரா என்ற பெயரிலும் ரீமேக் செய்தார்.

ஷங்கர்:

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் என செல்லமாக அழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர். அர்ஜுன் நடிப்பில் ஜென் டில் மேன் படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, இவர் இயக்கத்தில் வெளியான முதல்வன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை இந்தியில் நாயக் : ஏ ரியல் ஹீரோ என்ற பெயரில் ரீமேக் செய்தார். அப்படத்தில் அனில் கபூர் முக்கிய வேடம் ஏற்றார்.

கே.எஸ்.ரவிக்குமார்:

கோலிவுட்டில் எதார்த்தமாக கதை சொல்லி வெற்றி பெற்றவர்களில் முக்கியமானவர் கே.எஸ். ரவிக்குமார். காமெடி, த்ரில்லர், ஆக்‌ஷன் என ஜானர்கள் பலவற்றிலும் தன் பங்கை செய்வதில் என்றுமே சலைக்காதவர். ஹரி இயக்கத்தில் தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற சாமி படத்தை போலீஸ் கிரி என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்து பாலிவுட்டில் அறிமுகமானார். விக்ரம் வேடத்தை சஞ்சய் தத் நடித்தார். ஆனால், எதிர்பார்த்த அளவு இந்தி பாக்ஸ் ஆபிஸில் இப்படம் வசூலை கொட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top