Connect with us
Cinemapettai

Cinemapettai

hollywood

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கோலிவுட்டை கலக்கிய ஹாலிவுட் நடிகர்கள்.. இதில் உங்க ஃபேவரைட் யாரு?

உலக சினிமாக்களில் தற்போதைய நிலவரப்படி தமிழ் சினிமா தனி இடம் பெற்று வருகிறது. காரணம் உலகம் முழுவதும் தமிழர்கள் இருப்பதால் தமிழ் மொழி படங்கள் அங்கு வசூலில் சாதனைகள் செய்து வருகிறது. அதேபோல் தமிழ் சினிமாவில் ஹாலிவுட் நடிகர்களின் வரவும் இருந்துள்ளது. என்னதான் ராஜமவுலி ஹாலிவுட் நடிகர்கள் நடிக்க வைக்கிறேன் என பெருமை தட்டினாலும் அதற்கு விதை போட்டது தமிழ்தான்.

பெண்டலி மிச்சம் என்பவர் முன்னதாக ஜோதிகாவுடன் லிட்டில் ஜான் என்ற படத்தில் நடித்து இருப்பார். இவர் பிரபல ஹாலிவுட் நடிகரின் பேரன் ஆவார். படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் உருவானது குறிப்பிடத்தக்கது. பேண்டசி திரைப்படமாக வெளிவந்த இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆண்களுக்கு மத்தியில் பெண் சிங்கமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கியவர் எமி ஜாக்சன். மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி மிகவும் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூலோகம் படத்தில் நடித்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நேதன் ஜோன்ஸ் என்பவர் அடிப்படையில் ஒரு மல்யுத்த வீரர் ஆவார். பாக்ஸிங் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை மிரள வைத்தவர்.

பேராண்மை படத்தில் ரோலன்ட் கிக்கிங்கர் என்பவர் ஆண்டர்சன் என்ற கேரக்டரில் நடித்து தமிழ் ரசிகர்களை கதிகலங்க வைத்தவர். தோற்றத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டை போல இருக்கிறார் என நினைத்தவர்களுக்கு அர்னால்டுகே போட்டவர் இவர்தான் என தெரிந்தால் ஆச்சரியப்படதான் செய்வார்கள்.

ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுக்கும் அந்த ஆசையை விட்டு வைக்கவில்லை. ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஜானி என்ற வியட்நாம் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சியாளரை அறிமுகம் செய்தார். இந்த படத்தில் அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை உட்சா வைத்துவிட்டது என்று கூட சொல்லலாம். அந்தளவு வெறித்தனம் காட்டியவர். இவரை தமிழ் சினிமா இன்றுவரை டாங் லி என்றே அழைத்து வருகின்றனர்.

அந்த வகையில் சிங்கம் 2 படத்தில் நைஜீரியாவில் இருந்து வந்த டேனி வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். அவர் நடிப்பை லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top