Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹாலிவுட்டை மிரள வைத்த தனுஷ் நடிப்பு.. திரையரங்கமே கைத்தட்டி ஆரவாரம்
ஹாலிவுட் சென்ற தனுஷ் அங்கயும் ஒரு கை பார்த்துவிட்டார் என்றே சொல்லலாம். ஏன் என்றால் அவருடைய நடிப்பை பார்த்து அசந்து விட்டார்கள் ஹாலிவுட் ரசிகர்கள். அதனை பற்றி பார்க்கலாம்.
நடிகர் தனுஷ் தன் நடிப்பின் மூலம் தற்போது முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் மட்டும் நடித்த தனுஷ், தற்போது பாலிவுட் ,ஹாலிவுட் என மற்ற மொழி படங்களிலும் நடித்து தற்போது புகழின் உச்சத்தில் உள்ளார். தனுஷ் நடிப்பில் தற்போது வெளியான ஹாலிவுட் திரைப்படம் பக்கிரி.
பக்கிரி படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. பக்கிரி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் பிரான்சில் இப்படம் வெளியான போது அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
இந்த நிகழ்வை பார்த்த ரசிகர்கள் இது தனுஷ்க்கு மட்டும் பெருமையில்லை நம்ம கோலிவுட் சினிமாவிற்கு பெருமை என கூறி வருகின்றனர்.
சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.
