fbpx
Connect with us

HIV குணப்படுத்த ஒரு புதிய தீர்வு கண்டுபிடிப்பு.! எந்த நாட்டு விஞ்ஞானிகள் தெரியுமா?

India | இந்தியா

HIV குணப்படுத்த ஒரு புதிய தீர்வு கண்டுபிடிப்பு.! எந்த நாட்டு விஞ்ஞானிகள் தெரியுமா?

உயிர்க்கொல்லி கிருமி எனக் கூறப்படும் எச்.ஐ.வி குணப்படுத்த ஒரு புதிய தீர்வு  வந்துள்ளது.

உயிர்க்கொல்லி கிருமி எனக் கூறப்படும் எச்.ஐ.வி பாலியல் உறவு மற்றும் ரத்த பரிமாற்றத்தின் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. எச்.ஐ.வி கிருமி உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி செல்களை முழுமையாக அழித்து பின்பு ஜின்களின் கலந்துவிடுகிறது.

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட நபர் உடனே உயிர் இழப்பது இல்லை. எச்.ஐ.வி கிரீமி தாக்கியதும் கொஞ்சம் கொஞ்சமாக நோய் எதிர்ப்பு சக்தி செல்களை அளித்து, பின்பு உடலில் ஏற்படும் நோய்கள் மூலம், எச்.ஐ.வி பரவி உடல் உறுப்புகளைச் செயலிழக்கச் செய்கிறது. இதுவரைக்கும் இதற்கான தீர்வு கண்டுபிடிக்க முடியாமல் பல ஆராய்ச்சியாளர்கள் இருந்தனர்.

ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த நெப்ரஸ்கா பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதற்கான புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளனர். அதாவது எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட எலியை சோதனைக்கு உள்ளாக்கி புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தை செலுத்தி சோதனை செய்துள்ளனர்.

பிறகு எலியின் ஜீன்களில் இருந்து எச்.ஐ.வி கிருமியை நீக்கியுள்ளனர். இது எச்.ஐ.வியின் தீர்வுக்கு முதல் வெற்றி என கூறப்படுகிறது. ஆனால் மனிதர்களிடம் இந்த சோதனையை நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top