படம் ப்ளாப் ஆனா ஹிட் கொடுத்த 6 பாடல்கள்.. அதுலயும் மோகன் பாட்டு மரண ஹிட்

கதை பிடிக்காமல் ரசிகர்கள் மத்தியில் படுதோல்வி அடைந்த படங்களில் வெற்றி கண்ட பாடல்கள் அதிகம். அதில் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத 6 பாடல்களின் வரிசையை பார்க்கலாம். இதில் முக்கியமாக மோகன், இளையராஜா கூட்டணியில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ஹிட் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இன்று நேற்று நாளை: சிவக்குமார், லட்சுமி நடிப்பில் 1983 இல் வெளியான திரைப்படம் நேற்று இன்று நாளை. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’ என்ற பாடலை ஜானகி பாடியுள்ளார்,இளையராஜா இசையமைத்துள்ளார்.

பாடு நிலாவே: 1987இல் மோகன் நடித்த வெளியான திரைப்படம் பாடுநிலாவே. இப்படத்தில் ‘மலையோரம் வீசும் காற்று’ என்ற பாடல் ஹிட் பாடலாக இருந்தது. இப்பாடலை இளையராஜா இசையமைத்து எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியுள்ளார்.

சொந்தம் 16: 1989இல் வெளியான சொந்தம் 16 திரைப்படத்தில் மோகன் நடித்திருந்தார். இதில் இடம் பெற்ற’அம்மன் கோயில் பேரழகு’ என்ற பாடலை எஸ்பிபி பாடியுள்ளார். இப்பாடலுக்கு சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார்.

என் ஜீவன் பாடுது: கார்த்திக்,சரண்யா நடித்து வெளியான படம் என் ஜீவன் பாடுது. இப்படத்தில் ஹிட்டான பாடல் ‘ஒரு முறை உந்தன் தரிசனம்’. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். எஸ் ஜானகி இப்பாடலை பாடியுள்ளார்.

கிழக்கே வரும் பாட்டு: பிரசாந்த் நடிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கிழக்கே வரும் பாட்டு. இப்படத்தில் மனோ மற்றும் சித்ரா பாடியுள்ள பாடல் ‘சாமத்து காற்று வீசும்’.

காலமெல்லாம் காத்திருப்பேன்: 1993 இல் வெளியான விஜய் கதாநாயகனாக நடித்த படம் காலமெல்லாம் காத்திருப்பேன். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மணிமேகலையே மணி ஆகலையே நீ தூக்கத்தை விட வேணும்’என்ற பாடல் அதிக ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடல்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்