புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

History Of Violence Movie Review- ஹாலிவுட் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்த லோகேஷ்.. ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் முழு விமர்சனம்

History Of Violence Movie Review: விஜய், லோகேஷ் கூட்டணியின் லியோ நாளை வெளிவர இருக்கும் நிலையில் படம் கடைசி நிமிடம் வரை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு பக்கமும் வெரைட்டியாக வந்து விழும் சர்ச்சைகள் படத்திற்கு இலவச ப்ரொமோஷன் ஆக கூட அமைந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க ஏற்கனவே இப்படம் ஹாலிவுட் படத்தின் காப்பி என்று சொல்லப்பட்டது.

இது லோகேஷ் மீதும் ஒரு விமர்சனத்தை உருவாக்கி இருந்தது. ஆனால் இடையில் சில காலம் இது ஓய்ந்திருந்த நிலையில் தற்போது சம்பந்தப்பட்ட படத்தின் கதையும் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது. அந்த வகையில் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்து தான் லியோ உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. அப்படத்தின் விமர்சனத்தை பற்றி இங்கு காண்போம்.

கதைப்படி ஹீரோ மனைவி, மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். ரெஸ்டாரண்ட் ஒன்றை நடத்தி வரும் அவர் அமைதியான சுபாவம் கொண்டவர். ஆனால் அவருடைய கடைக்கு வரும் வில்லன்கள் அங்கு இருக்கும் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்கின்றனர். அப்போது ஹீரோ அவர்களை கொன்று விடுகிறார். இதனால் ஓவர் நைட்டில் சூப்பர் ஹீரோவாக மாறும் அவரை முக்கிய வில்லன் கண்டு கொள்கிறார்.

உடனே அந்த கோஷ்டி ஹீரோவையும் குடும்பத்தினரையும் துரத்துகின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஹீரோ நான் அவன் இல்லை என்று சொல்கிறார். இருந்தாலும் ஒரு கட்டத்தில் இந்த உண்மையை மறைக்க முடியாமல் எதிரியின் கூடாரத்திற்கே செல்கிறார். இறுதியில் அந்த வில்லன் தான் இவருடைய அண்ணன் என்ற ட்விஸ்டும் உடைகிறது.

அதன் பிறகு நடக்கும் சண்டையில் வில்லனை க்ளோஸ் செய்துவிட்டு ஹீரோ தன் குடும்பத்துடன் இணைகிறார். இப்படியாக கடந்த 2005-ல் வெளிவந்த இப்படத்தின் கதை தான் லியோ என்று கூறப்படுகிறது. ட்ரெய்லரும் கிட்டத்தட்ட இதே போல் இருந்ததை நாம் பார்த்தோம். ஆனால் இதில் தான் லோகேஷ் தன் திறமையை காட்டி இருக்கிறார்.

அதாவது பெயருக்கு ஏற்றார் போல் அதிரடி ஆக்சன் காட்சிகள் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தில் கிடையாது. இதுதான் ஒரு மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. ஆனால் சாதாரணமாகவே வெறித்தனமாக படம் எடுக்கும் லோகேஷ் இந்த முறை அதை பல மடங்காக உருவாக்கி இருக்கிறார். அதற்கு ட்ரெய்லரே உதாரணமாக இருக்கும் நிலையில் நாளை வெளியாக இருக்கும் லியோ அனைத்து கேள்விகளுக்குமான பதிலாக இருக்கும்.

- Advertisement -

Trending News