Tamil Cinema News | சினிமா செய்திகள்
இயக்குனர் பாண்டியராஜுக்கு சல்யூட் அடித்த ஹிப் ஹாப் தமிழா ஆதி . ஏன் தெரியுமா ?
கடை குட்டி சிங்கம்
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் கடைக்குட்டி சிங்கம். மேலும் இப்படத்தை சூர்யாவின் தனது 2டி என்டர்டெயின்மெண்ட் வாயிலாக தயாரித்தார். விவசாயம் பற்றியும் குடும்ப வாழ்க்கை, சொந்த பந்தங்களின் உறவு முறை பற்றியும் மிக நேர்த்தியாகக் இப்படத்தில் பல காட்சிகள் உள்ளது. ரசிகர்கள், செலிபிரிட்டிகள், அரசியல் தலைவர்கள் என அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது இப்படம்.

kks
இப்படத்தை பார்த்துவிட்டு தான் கார்த்தி மற்றும் இயக்குனரை பாராட்டி சல்யூட் வைத்துள்ளார் நம் ஆதி. இதோ அவர் பதிவிட்ட கருத்து.
@Karthi_Offl na??- அருமையான நடிப்பு-அற்புதமான திரைப்படம். கூட்டுக் குடும்பத்தில் அதுவும் விவசாயம் செய்யும் குடும்பத்தில் வளர்ந்ததாலோ என்னவோ,என் கண்களில் நிறைய இடங்களில் கண்ணீர் வழிவதை தடுக்க முடியவில்லை.நம் சொந்தங்களை கண் முன்னே நிறுத்திய @pandiraj_dir இயக்குநருக்கு சல்யூட்.
— Hiphop Tamizha (@hiphoptamizha) July 28, 2018
