Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஹிப்ஹாப் ஆதி நடிக்கும் இரண்டாவது படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது.
ஹிப்ஹாப் தமிழா என்பது சொல்லிசை இசைக்குழுவின் பெயர். இதில் நமக்கு யூ டியூப் வாயிலாக அறிமுகமாகி பின்னர் பாடகர், இசையமைப்பாளர், நடிகர், இயக்குனர் என படிபடியாக வளர்ந்தவர்.
ஹிப்ஹாப் ஆதி 2
சுந்தர் சி தயாரிப்பில் தான் நடிகராக தன் இரண்டாவது படமும். பார்த்திபன் தேசிங்கு இயக்கும் இப்படம் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். கரு.பழனியப்பன், RJ விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், புட் சட்னி ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
#HHT2 ???? On November 4 at 12PM @khushsundar @hiphoptamizha #SundarC pic.twitter.com/oBLrClDX5h
— RJ Vignesh (@RjVigneshkanth) October 31, 2018
ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கு, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படபர்ஸ்ட் லுக் வீடியோ வருகிற நவம்பர் 4-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
