ஹிப்ஹாப் தமிழா  என்பது  சொல்லிசை இசைக்குழுவின் பெயர்.  இதில் ஆதி, ஜீவா இருவரும்  முக்கிய கலைஞர்கள். இவர்கள் ரசிகர்களுக்கு  ஆல்பம் வாயிலாக அறிமுகம் ஆனவர்கள். 2015ல் இருந்து இவர்கள்  தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார்.

ஆதி நமக்கு யூ டியூப் வாயிலாக   அறிமுகமாகி பின் னர்  பாடகர், இசையமைப்பாளர்,  நடிகர், இயக்குனர் என படிபடியாக வளர்ந்தவர். என்ன தான் மனிதர் சினிமாவால் பேமஸ் ஆனாலும், இளசுகளின் கவனத்தை இவர் ஈர்த்தது ஜல்லிக்கட்டு பாடல் மூலம் தான்.

ஹிப்ஹாப் ஆதியும் நேற்று தன்  ட்விட்டர்  பக்கத்தில்

“இனி நான் சிங்கிள் கிடையாது. உங்கள் ஆசீர்வாதங்கள் எனக்கு தேவை !! நன்றி”  என்று ஸ்டேட்டஸ் போட்டார்.

இந்த  ட்வீட் வைரல் ஆகிவந்த நேரத்தில் , ஆதிக்கு ஆந்திராவில் திருமணம் நிச்சியதார்தம் நடைபெற்றதாக கூறப்பட்டது.

அதற்கு ஏற்றார் போல் ஆதி  ஒரு போட்டோவும் வைரல் ஆனது.

பின்னர் சில மணி நேரத்தில்  மணக்கோலத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

நிச்சியம் முடிந்த கையுடன் திருமணமும் நடந்து என்று சொல்லப்பட்டது.

எனினும் ஆதி தரப்பில் இருந்து எந்த தெளிவான பதிலும் இல்லை. ஆதி தன் ட்விட்டரில் போட்டோவுடன் இந்த ட்வீட் தட்டி விட்டார்..

விரைவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் சொல்லுவாரா அல்லது தன் பாணியில் வீடியோ மூலம் பதில் சொல்வாரா ? வெயிட் & வாட்ச்.