Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜெயம் ரவி படத்தில் இரண்டாவது முறையாக இணைந்த இசை அமைப்பாளர். அப்போ அசத்தல் தீம் ம்யூசிக் இருக்கு. JR 24 .
ஜெயம் ரவி படத்தின் இசையமைப்பாளர் முடிவானது.
JR 24 ஜெயம் ரவி
ஜெயம் ரவி டிக் டிக் டிக், அடங்கமறு படங்களை தொடர்ந்து இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார். தன் அண்ணனுடன் தனி ஒருவன் 2 வில் இணைகிறார். இந்த படம் துவங்குவதற்கு முன் அவர் நடிக்கும் JR24 பற்றிய அறிவிப்புக்கு முன்பே வந்தது.
வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல் ஐசரி கணேஷ் தயாரிக்கும் ரொமான்டிக் படம். குறும்படங்கள் வாயிலாக ரீச் ஆன பிரதீப் ரங்கநாதன் இயக்குனராக அறிமுகமாகிறார்.

JR 24
காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தின் தலைப்பு “கோமாளி” என்று கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் பட்சிகள்.
இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக ஆதி ஒப்பந்தமாகியிருப்பதாக ஜெயம் ரவி அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
This is going to be real good ?? https://t.co/5ZmfPp7Jwm
— Hiphop Tamizha (@hiphoptamizha) February 15, 2019
தனி ஒருவன் போல மீண்டும் பட்டயகிளப்புங்க.
