Tamil Nadu | தமிழ் நாடு
வைரலாகுது சாந்தனு-கிகி, யுவனின் டி ஷர்ட் போட்டோ! இந்திய லெவெலில் ட்ரெண்ட் ஆகுது ஹாஷ் டாக்
செலிபிரிட்க்கள் செய்யும் ஒரு சில விஷயம் டக்கென ட்ரெண்ட் ஆகிப்போவது அடிக்கடி நிகழும் சம்பவம் தான்.
சாந்தனு கிகி விஜய் – சாந்தனு தனக்கென தனி அடையாளம் பெற கடினமாக உழைத்து வரும் கோலிவுட் வாசி. கீர்த்தனா என்பது ஒரிஜினல் பெயராக இருப்பினும், கிகி என்று செல்லமாக அழைக்கப்படுபவர். பேமஸ் வி ஜே , மாடல், நடிகை என்று அசத்துபவர். நம் சாந்தனு பாக்கியராஜின் காதல் மனைவி.
இந்த செலிபிரிட்டி ஜோடியை, அவர்களின் குணாதிசயத்துக்காக கோலிவுட்டில் பலருக்கு பிடிக்கும் . ஒருவருக்கொருவர் சப்போர்ட்டாக இருப்பது, சமூகவலைத்தளங்களில் செல்ல சீண்டல் என ஹாட் ஜோடி இவர்கள்.
இந்த ஜோடி நேற்று பதிவிட்ட போட்டோஸ் இணையத்தில் லைக்ஸ் குவித்தது. அதற்கு காரணம் இந்த டி ஷர்ட்டில் உள்ள வாசகமே. பலரும் பகிர ஆரம்பித்தனர்.

shanthani kiki vijay
இவர்கள் மட்டுமன்றி இசை அமைப்பாளர் யுவன், நடிகர் சிரிஷ் உடன் உள்ள போட்டோவிலும் இதே டி ஷர்ட் இடம் பிடித்தது. அந்த ஸ்டாட்ஸ்சிற்கு கனிமொழி சுவாரஸ்யமாக உள்ளது என பதிவிட்டார். சிரிஷ் சாத்தியமா எனக்கு ஹிந்தி தெரியாது என பதில் தந்தார். யுவன் தன் நன்றிகளை பகிர்ந்தார்.

yuvan metro sirish
ஹிந்தி தெரியாது போடா என்ற ஹாஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மேலோட்டமாக பார்க்கும் பொழுது இரண்டு நிகழ்விலும் சிறிய ஒற்றுமை, வேற்றுமை என இரண்டும் உள்ளது.
