தமிழகத்தின் பிரச்சனைகளை பட்டியலிட்டால் ஏடு தாங்காது. ஆனால் இதனை தீர்க்கத்தான் ஆள் இல்லை.

மாநில அரசோ உட்கட்சி பிரச்சனையில் சிக்கி படாதபாடு பட்டு வருகிறது. மத்திய அரசோ எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

தமிழக மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பற்றி இரண்டு அரசுகளுக்கும் கவலை இல்லை.

இது ஒரு புறம் என்றால் மற்றொரு புறம் தமிழகத்திற்கு தேவையில்லாத நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

வழகொழிந்து போன சமஸ்கிருத திணிப்பு, இந்தி திணிப்பு நடவடிக்கைளில் தீவிரம் காட்டி, மக்களை மேலும் கொதிப்படையச் செய்து வருகிறது.

இதன் புதிய பரிணாமமாக தமிழ் படங்களை கட்டாயம் இந்தி மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் அதாவது டப்பிங் செய்ய வேண்டும் அல்லது இந்தி சப் டைட்டில் போட வேண்டும் என சட்டம் நிறைவேறியுள்ளது.

இதனை பின்பற்றும் படங்கள் மட்டுமே விழாக்களில் கலந்து கொள்ள முடியும். இந்த நடவடிக்கை இந்தி திணிப்பு மட்டுமின்றி, தற்போதைய அடிப்படை தேவைகளை புறக்கணித்துவிட்டு, மத்திய அரசு எதில் கவனம் செலுத்துகிறது என்ற கேள்வியையும் எழுப்பிவருகிறது.

இது தமிழுக்கு மட்டுமல்ல, அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் கட்டாயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.