நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இந்தி மொழியை கட்டாயமாக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் ஒற்றுமையையும் வலிமையையும் கருத்தில் கொண்டு இந்தி மொழியை 8-ம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயமாக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்தியைக் கண்டாலே துஷ்டனைக் காண்பதுபோன்ற தோற்றத்தை மாநில அரசியல் கட்சிகள் உருவாக்கி வைத்துள்ளன.

இந்நிலையில், பல்வேறு வழக்குகளில் மக்கள் நலனையும் நாட்டின் ஒருமைப்பாட்டையும் கருத்தில் கொண்டு சமீபத்தில் பல அதிரடியான தீர்ப்புகளை வழங்கியுள்ள உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் வழங்கப்போகும் தீர்ப்பு என்ன என்ற எதிர்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது.

இந்த மனு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.