தற்போது தமிழக அரசியலில் பல்வேறு குழப்பங்களும், அதிரடி திருப்பங்களும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு மத்திய அரசு முயன்று வருவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மைல்கற்களில் இந்தி மொழி கட்டாயம் என கூறப்பட்டது. இதற்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்தன.

இதுகுறித்து தனக்கே உரிய பாணியில் நடிகர் எஸ்.வி.சேகர் விமர்சனம் செய்துள்ளார். இந்தி மொழி படிப்பதால் மாணவர்களுக்கு என்ன பிரச்சனை வந்து விட போகிறது.

தமிழகத்தை தவிர மற்ற தென் மாநிலங்களில் எல்லாம் இந்தி பேசுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் 4 தலைமுறைகளாக இந்தி மொழியை கற்காமல் இருக்கிறோம்.

சில அரசியல் கட்சிகள் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு, போராட்டம் என திசை திருப்பி விடுகின்றனர். மேலும் இந்தி திணிப்பு, விவசாயிகள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் மோடியை விமர்சிக்கிறார்கள்.

பிரதமர் மோடியும் அடிப்படையில் கடலை விவசாயி தான் என்று உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நடைபெற்ற போராட்டங்களுக்கு அவர் செவி கொடுத்தாரா? ஆனால் மோடியை குறை சொல்ல இங்கு ஒரு கூட்டம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.