செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ஹிந்தி ரொம்ப முக்கியம்.. பாலிவுட் போகணும்னா இதெல்லாம் பண்ணனும் – ரெஜினா

தமிழில் பிரசன்னா, லைலா நடிப்பில் வெளியான கண்ட நாள் முதலே படத்தில் லைலாவின் தங்கையாக நடித்திருப்பார் ரெஜினா. பின் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிக்க வந்த அவர், மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பார்.

சமீபத்தில் இவர் பற்றிய தகவல் எதுவும் பெரிதாக வரவில்லை. ஆனால் இவர் பாலிவுட் பக்க போய்விட்டார் போல. ஆரம்பத்தில், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர் சமீப காலமாக பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.

ஹிந்தி கண்டிப்பா தெரிஞ்சுருக்கணும்

இந்த நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் பாலிவுட் படங்களில் நடித்தது தொடர்பான தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதில் அவர் கூறியதாவது, “பாலிவுட் படங்களில் நடிக்க வேண்டும் என்றால் நிச்சயம் அவர்களுக்கு ஹிந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும். அப்படி மொழி தெரியாத நடிகர்களையோ, நடிகைகளையோ அவர்கள் நடிக்க வைக்க விரும்புவதில்லை.”

“ஆனால் நம்ம ஊரில், மொழி எல்லாம் முக்கியமே இல்லை. இங்கு உள்ளவர்களுக்கு பெரிதாக வாய்ப்பு கொடுக்காமல், மற்ற மாநில நடிகைகள் மீது தான் எல்லோருக்கும் கவனம் உள்ளது. ஆனால் பாலிவுட்டில் அப்படி இல்லை. ஹிந்தி படங்களில் பெரும்பாலும் நேரடியாக வசனங்களை பதிவு செய்கின்றனர். இதனால், அங்குள்ள நடிகர்களுக்கு நிச்சயம் மொழி அறிவு தேவை”

“நல்ல வேளையாக எனது அம்மா சிறு வயது முதலே என்னை ஹிந்தி படிக்குமாறு கட்டாயப்படுத்தினார். பள்ளியிலேயே எனது 2ம் மொழியாக ஹிந்தியைத் தேர்வு செய்யுமாறு கூறினார். அப்படி ஹிந்தி கற்றுக்கொண்டதால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Trending News