Tamil Nadu | தமிழ் நாடு
திருச்சியில் இந்தி எழுத்துகள் அழிப்பு.. இந்தி திணிப்பு பற்றி இனிமேலும் யோசிக்க மாட்டார்கள்
தமிழ்நாட்டில் ஏற்கனவே பல பிரச்சினைகள் பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதில் குறிப்பாக ஹைட்ரோ கார்பன் திட்டம் ,ஸ்டெர்லைட் போன்ற பிரச்சினைகள் இன்னும் முடிவடையாமல் நீதிமன்றத்தில் வழக்காக உள்ளன. இப்படி இருக்கையில் மத்திய அரசு தற்போது ஒரு புதிய பிரச்சனையை உருவாக்கி உள்ளது.
அதாவது இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை மூன்றாவது மொழிப்பாடமாக கட்டாயமாக திட்டமிட்டிருந்தது. ஆனால் அதற்கு பல மாநிலங்களில் இருந்தும் பல கட்சியில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது அடுத்து அந்த முயற்சி சற்று கைவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தி மொழி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருச்சியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும் பிஎஸ்என்எல், தலைமை தபால் நிலையம் ,விமான நிலையம் ஆகிய இடங்களில் உள்ள இந்தி மொழியை கருப்பு மையால் மறைத்துள்ளனர்.
இதனை கண்ட ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமரா மூலம் காட்சிகளை வைத்து இந்தி எழுத்துக்களை அழித்தவர்கள் யார் என அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
