நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ கூட்டணியில் வெளியான திரைப்படம் மெர்சல். தமிழகத்தில் பல்வேறு தடைகளை தாண்டி மெர்சல் திரைப்படம் வெளியானது.

mersal-box

மெர்சல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த வேலையில், ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா பற்றிய வசனங்கள் மத்திய அரசை விமர்சிப்பதாக சர்ச்சை எழுந்தது.

பல்வேறு தடைகளை கடந்து வந்த மெர்சல் படத்தில் விஜய் பேசிய தெறிக்கவிடும் அரசியல் வசனங்களால் அரசியல் ரீதியாக விமர்சனங்களுக்கு உள்ளானது.

mersal

இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த பரபரப்பே மெர்சல் படத்தின் வசூலை மேலும் அதிகரித்தது. இது ஒருபுறம் இருக்க, சில அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு என்ற பெயரில் இப்படத்துக்கு விலையில்லா விளம்பரங்கள் செய்தனர்.

இந்த விவகாரம், இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனது. அது ஒரு பக்கம் இருக்க, திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் மெர்சல் திரைப்படம் வசூலில் கலக்கி வருகிறது.

mersal vijay
mersal vijay

இந்த நிலையில், ‘மெர்சல்’ படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘அதிரிந்தி’, சென்சார் பிரச்னையால் திட்டமிட்டபடி வெளியாக முடியவில்லை. ஒரு வழியாக இந்த வாரம் அங்கு திரைப்படம் ரிலீஸாகியிருக்கிறது.

இதுவரைக்கும் விஜய் படங்களுக்கு இல்லாத வகையில், 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ‘அதிரிந்தி’ வெளியாகியிருக்கிறது.

 

இதன் விளைவாக எந்த தமிழ் படமும் இதுவரை செய்யாத வசூல் சாதனையை, விஜய்யின் மெர்சல் படம் செய்துள்ளது. இதுவரை இப்படம் உலகம் முழுதும் ரூ. 225 கோடிகளை வசூலாக குவித்துள்ளது. அதில், அதிவிரைவாக ரூ. 200 கோடி வசூலை எட்டிய முதல் தமிழ் படம் என்ற புதிய சாதனை படைத்துள்ளது.

mersal

இந்த படத்தின் வசூல் ரூ 250 கோடியைத் தொட்டிருக்கிறது என்கிறார்கள். இதனால் விஜய்யின் சம்பளம் ஏறவிருக்கிறது. வசூல் நிலவரம் ஃபைனல் ஆவதற்காகவே அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் விஜய் மௌனம் காப்பதாக கூறுகிறார்கள் விஜய்யின் நெருங்கிய வட்டாரங்கள்.