Connect with us
Cinemapettai

Cinemapettai

ipl-top-5-player

Sports | விளையாட்டு

இமாலய ரன் குவிப்பு.. எட்டாத உயரத்தில் உள்ள 5 ஐபிஎல் வீரர்கள், யாருக்கு அந்த ஆரஞ்சு தொப்பி.?

ஐபிஎல் 13-ஆவது சீசன் தொடங்கி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆப் மற்றும் மீதி உள்ள நிலையில், பல வீரர்கள் இமாலய ரன்களைக் குவித்துள்ளனர்.

விராட் கோலி

பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி அதிரடியாக ஆடக்கூடியவர். இந்த சீசனில் அவர் கொஞ்சம் ஃபார்ம் அவுட் என்றே கூறலாம். முதலில் சொதப்பினாலும் கடைசி கட்டத்தில் சுதாரித்து தனது அணியை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 460 ரன்களை குவித்து 5 வது இடத்தை பிடித்துள்ளார்.

தேவதத் படிக்கல்

சென்னை அணியின் ஓபனராக இறங்கிவரும் வீரர் தேவதத் படிக்கல். இவருக்கு முதலில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், சென்னை அணியின் சொதப்பலான ஓபனிங் பேட்டிங் இவருக்கு மீண்டும் வாய்ப்பை பெற்று தந்தது. வாய்ப்பை பயன்படுத்தி 472 ரன்களை குவித்து நான்காமிடத்தில் உள்ளார்.

ஷிகர் தவான்

இரண்டு சதம், இரண்டு அரை சதம் என்று அசத்திய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், பல வெற்றிகளை தேடித்தந்த அவர் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் அதிரடி ஆட்டம் ஆடி 525 ரன்களை குவித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.

டேவிட் வார்னர்

ஹைதராபாத் அணி நடுவரிசையில் பேட்டிங்கில் பலவீனமாக உள்ளது. அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறச் செய்தது டேவிட் வார்னர் என்றே கூறலாம். சரியாக அணியை கணித்த அவர் சிறப்பாக செயல்பட்டு இந்த சீசனில் 529 ரன்களை குவித்து நான்காம் இடத்தில் உள்ளார்.

கே எல் ராகுல்

பஞ்சாப் அணியின் கேப்டன் கே எல் ராகுல். தன்னை நெருங்க கூட முடியாத அளவில் இமாலய ஸ்கோரை தன் வசம் வைத்துள்ளார். அதிரடி ஆட்டம் ஆடிய இவர் 55.83 என்ற சராசரியுடன் 670 ரன்களை குவித்து எட்டாத உயரத்தில் உள்ளார்.

ipl-2020

Continue Reading
To Top