Connect with us

Cinemapettai

‘பத்ம விபூஷன்’ விருதை தொடர்ந்து ரஜினிகாந்திற்கு மேலும் ஒரு உயரிய விருது?

‘பத்ம விபூஷன்’ விருதை தொடர்ந்து ரஜினிகாந்திற்கு மேலும் ஒரு உயரிய விருது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதில் இருந்து அவருக்கு இருந்த மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. ரஜினியை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் மகாராஷ்டிரா பாஜக எம்.எல்.ஏ ஒருவர் அவருக்கு விருதுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

மகாராஷ்டிரா எம்.எல்.ஏவான அனில் கோட்டே என்பவர், ‘ரஜினி தங்கள் மாநிலத்தில் பிறந்தவர் என்பதால் அவருக்கு ‘மகாராஷ்டிரா பூஷன்’ விருது வழங்க வேண்டும் என்றும் மேலும் அவருக்கு ‘’பாரத ரத்னா’ விருதை வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரஜினிக்கு சமீபத்தில் ‘பத்ம விபூஷன்’ விருது வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு ‘பாரத ரத்னா’ விருது கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

அதிகம் படித்தவை

To Top