விஜயின் மெர்சல் டீசர் வெளியாகி சில மணி நேரத்தில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. வெறும் நான்கே மணி நேரத்தில் 599k லைக்குகள் பெற்று விவேகத்தின் சாதனையான 598k லைக்குகளை முறியடித்தது. இதுவரை 8,672,708 பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

இப்படி சாதனை மேல் சாதனை படைத்துவரும் மெர்சல் டீசர் தற்போது வரை 675k லைக்குகளை பெற்றிருந்தாலும் 144k  அன்லைக்குகளை பெற்றுள்ளது. விஜய் ரசிகர்கள் இதற்கு காரணம் அஜித் ரசிகர்கள்தான் என்று புகார் கூறினாலும் ஒரு லட்சத்திற்கு மேல் அன்லைக் பெற்ற வருத்தத்தில் உள்ளது மெர்சல் படக்குழு.

இதனால் டீசரை மேலும் சிறப்பாக எடிட் செய்து வெளியிட்டிருக்கலாமோ என்று யோசனை செய்து வருகிறதாம் படக்குழு. இதனால் அடுத்து வரவுள்ள டிரைலரை பார்த்து பார்த்து உருவாக்கி வருகின்றனராம், அதில் எந்த குறையும் இல்லாதபடி.