விஜய் டிவியில் ஒரு எபிசோடுக்கு நடிகைகள் வாங்கும் சம்பளம்.. ராஜாராணி ஆல்யாவை மிஞ்சும் சரவணன் மீனாட்சி ரக்ஷிதா!

இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் டீவி சீரியல்கள் ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்திற்குமே ரசிகர்கள் அதிகம். சின்னத்திரையில் குறிப்பாக ஸ்டார் விஜய்யில் சீரியல்களில் வரும் நடிகைகளின் ஊதிய அளவுகள் பற்றியே இப்போது பார்க்கவிருக்கிறோம்.

“பொண்ணுக்கு தங்க மனசு” நாடகத்தில் வந்து தங்க மனசுக்காரி என பெண்களால் பேசப்படும் விந்துஜா விக்ரமன் எப்பிசோட் ஒன்றுக்கு 8000ரூபாய் வாங்குகிறாராம்.

“ஈரமான ரோஜாவே”நாடகத்தில் வரும் பவித்ரா எப்பிசோட் ஒன்றுக்கு 13000 வாங்குகிறாராம். சில ரியாலிட்டி ஷோக்களின் தொகுப்பாளராகவும் பிரபல சீரியல் நடிகையாகவும் பிரபலமானவர் ஜாக்குலின் “தேன்மொழி பி.ஏ” நாடகத்தில் நடிப்பதற்காக எப்பிசோட் ஒன்றுக்கு 11000 சம்பளமாக பெறுகிறாராம்.

“சிவா மனசுல சக்தி” நாடகத்தில் நடிப்பவர் தனுஜா கவுடா இவர் இப்போது எப்பிசோட் ஒன்றுக்கு 7000 ரூபாயை ஊதியமாக பெறுகிறாராம்.”நாம் இருவர் நமக்கு இருவர் ” நாடகத்தின் ராஷ்மி எப்பிசோட் ஒன்றுக்கு 8000ரூபாய் ஊதியமாக பெறுகிறாராம்.

vijay-tv
vijay-tv

அதே நாடகத்தில் நடிக்கும் நடிகை ரக்ஷா ஹோல்லா எப்பிசோட் ஒன்றுக்கு 9000ரூபாய் ஊதியமாக பெறுகிறாராம். இதே சீரியலில் நடிக்கும் காயத்ரி எப்பிசோட் ஒன்றுக்கு 10000ரூபாயை ஊதியமாக பெறுகிறாராம்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நடிக்கும் வி.ஜே சித்ரா 10000-12000 வரை ஒரு எப்பிசோடுக்கு ஊதியமாக பெறகிறார். அதே சீரியலில் நடிக்கும் சுஜித்ரா எப்பிசோட் ஒன்றுக்கு 15000ரூபாய் ஊதியமாக பெறுகிறாராம்.

ராஜா ராணியில் நடிக்கும் ஆல்யா மானசா எப்பிசோட் ஒன்றுக்கு 17000 ஊதியமாக பெறுகிறாராம். சரவணன் மீனாட்சி புகழ் ரக்சிதா இப்போது “நாம் இருவர் நமக்கு இருவர்” சீரியலுக்காக எப்பிசோட் ஒன்றுக்கு 17,500 ஊதியமாக பெறுகிறாராம். “ஆயத எழுத்து” நாடகத்தின் சரண்யா எப்பிசோட் ஒன்றுக்கு 16000 ரூபாய் ஊதியமாக பெறுகிறாராம்.

- Advertisement -spot_img

Trending News