Tamil Cinema News | சினிமா செய்திகள்
அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்களில் இடம் பிடித்த ஒரே இந்தியர்

அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்:
இந்திய விளையாட்டு வீரர்களிலேயே, காஸ்ட்லியான வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி களத்தில் ஆக்ரோஷமாக ஆடுவதில் கில்லாடி. முன்னாள் கேப்டன் தோனியின் கூல் குணத்துக்கு விராட் அப்படியே நேர் எதிர். எதிலுமே ஆக்ரோஷத்தை கையில் எடுத்து வெற்றியும் காண்பார். 2008ம் ஆண்டில் இருந்து இந்திய அணிக்காக விளையாடி வருபவர். ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடி, அனைவர் கவனத்தையும் தன் மீது திரும்ப வைத்தவர். இதன்மூலம், 2013ம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முதலிடம் பெற்றார். ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்லாமல் டெஸ்ட் தொடரிலும் டாப் வீரராக இருக்கிறார்.
2014 ஆம் ஆண்டில், மகேந்திர சிங் தோனி தன் கேப்டன் பதவியை ராஜினாமா செய்து டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். அதன்பின், விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதிக செஞ்சுரிகளை அடித்ததில் விராட் இரண்டாவது வீரராக இடம் பிடித்து சாதனை படைத்து இருக்கிறார். இந்தியாவின் சிறந்த லீக் தொடரான ஐ.பி.எல்லிலும் விராட் தனது பங்கை சிறப்பாக செய்து வருகிறார். தனது நீண்ட காதலியான அனுஷ்கா சர்மாவை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். அனுஷ்கா பாலிவுட் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டில் பல சாதனைகளுக்கு விராட் சொந்தக்காரர். பல நிறுவனங்களுக்கு அம்பாசிடராக இருக்கும் கோலி, இந்திய வீரர்களிலேயே அதிகம் சம்பாரிக்கும் வீரராக இருந்து வருகிறார். இந்நிலையில், போர்ப்ஸ் நிறுவனம் உலகில் அதிகம் சம்பாரிக்கும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில், அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மேவெதர் ஆண்டுக்கு 28.5 கோடி டாலர் வருமானத்துடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இதே பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 83வது இடத்தை பிடித்து இருக்கிறார். ஆண்டுக்கு அவர் வருமானம் 160 கோடியாக இருக்கிறது. இதன் மூலம் தொடர்ந்து 3 வருடங்களாக இப்பட்டியலில் இருக்கும் கோலி. 100 வீரர்கலில் இடம் பிடித்து இருக்கும் ஒரே இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
