துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக ‘நரகாசுரன்’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார்.

சாமி..நடிகரும் இந்தப் படத்தில் மிக முக்கிய  கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்  என்று கூறப்படுகிறது.

ஆனால் அவர்  போடும் கண்டிஷன்கள் தான் இயக்குனரை கதற வைக்கிறதாம். இதற்கு முந்தையப் படத்திலும் சாமி நடிகர் கொடுத்த குடைச்சல் மிக அதிகம் என்று செய்திகள் கசிந்தது.

செவன்ஸ்டார் ஹோட்டலில் தங்குவேன் என்று அடம் பிடிப்பதும் ஹீரோவைக் காட்டிலும் அதிக சம்பளம் வேண்டும். போஸ்டரில் தனக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றும் அலப்பறை செய்கிறாராம்.

மேலும், இந்த படத்தில் நாக சைதன்யா நடிக்கவிருந்தது, ஆனால் அவரது  திருமண நாள் நெருங்குவதால் அவர் இப்படத்தில் இருந்து ஒதுங்கிவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரேயா வில்லியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதையை கேட்டவுடனே இப்படத்தில் நடிக்க ஸ்ரேயா உடனடியாக ஒத்துக்கொண்டார் என கூறப்படுகிறது.