virat-kohli-ravi-shastri
virat-kohli-ravi-shastri

இந்திய அணியின் மோசமான செயல்பாடுகள் குறித்து விராட் கோஹ்லி மற்றும் ரவி சாஸ்திரியிடம் நிச்சயம் விசாரணை நடத்தப்படும் என்ற பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

மூன்று டி.20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று இதில் டி.20 தொடரை மட்டும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்தடுத்தாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில், தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரையும் இந்திய அணி படுமோசமாக இழந்தது. இதனையடுத்து இந்திய அணி மீது கடுமையான விமர்ச்சனங்கள் வைக்கப்பட்டது.

வரும் செவ்வாய்க்கிழமை மும்பையில் சிஓஏ கூட்டம் நடக்கிறது. இதில் முக்கியமாக பிசிசிஐ புதிய சட்ட திட்டத்தை நடைமுறைபடுத்த உள்ளது. பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் நேரிலோ அல்லது அறிக்கை மூலமாகவோ சிஓஏ விளக்கம் கோரலாம்.

shastri-kohli
 

இந்திய அணியின் தற்போதைய மேலாளர் சுனில் சுப்பிரமணியம் எந்த அறிக்கையும் தரமாட்டார் மேலும் முன்பு பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல் மட்டுமே அறிக்கை சமர்ப்பித்தார். மேலும் சில வீரர்கள் காயம் அடைந்தது குறித்து உடலியக்க நிபுணர் பாட்ரிக்கிடமும் விளக்கம் கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புவனேஸ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகியோர் காயம் தொடர்பாக அறிக்கை பெறப்படும் எனத்தெரிகிறது. இதனால் இந்திய அணிக்கு புது சிக்கல் வந்துள்ளது.