Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரகுல் ப்ரீத் சிங் பற்றிய அதிரடி அறிவிப்பை வெளியிட்ட உயர் நீதிமன்றம்! வடை போயிடுமோ என வருத்தத்தில் ரசிகர்கள்!
பிரபல நடிகையான ரகுல் பிரீத் சிங் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகிற்கு ‘தடையறத் தாக்க’ என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
போதைப்பொருள் சம்பந்தமான வழக்கில் ரகுல் ப்ரீத் சிங் விசாரணைக்காக சென்றது நாம் அனைவரும் அறிந்ததே.
மேலும் ராகுல் ப்ரீத் சிங் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய பத்திரிகை கவுன்சில் மற்றும் என்பிஏ செய்தி கவுன்சில் ஆகியவற்றிற்கு போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகம் தனது விசாரணையை முடிக்கும்வரை தன்னைப்பற்றி செய்தி எதுவும் வெளியிட கூடாது என்ன உத்தரவிடுமாறு மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை என்பிஏ- ம் மற்றவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
மேலும் ரகுல் பிரீத் சிங்கை பற்றி ஏதேனும் தகவல்களை, செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளதால் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு ஆணையைப் பிறப்பித்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.
நடிகையின் மனுவில் போதைப்பொருள் வழக்கில் தன்னைப்பற்றிய போலியான அவதூறு செய்திகளால் அவருக்கும் அவரது குடும்பத்தினரின் நற்பெயருக்கும் சேதம் விளைவிப்பதாகவும் கூறியுள்ளார்.
ரகுல் ப்ரீத் சிங் நன்றாக வளர்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் மீது இவ்வாறு ஒரு வழக்கு பதிவாகி இருப்பது அவரது ரசிகர்களிடத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

rakul
