இளையதளபதி விஜய் நடித்த 60 வது படத்தின் டைட்டில் ‘பைரவா’ என கடந்த வாரம் அறிவித்தவுடன் இணையதளங்கள் அதிரும் வகையில் இந்த டைட்டிலுக்கு விஜய் ரசிகர்கள் பெரும் வரவேற்பை அளித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் இந்த டைட்டிலில் ஒருசில ரகசியங்கள் ஒளிந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தற்போது பார்ப்போம்.

முதலாவதாக இந்த படத்தின் டைட்டில் தூய தமிழில் அதுவும் ஒரு தெய்வத்தின் பெயரில் அமைந்துள்ளது. இதனால் இந்த படம் வரிவிலக்கு பெறுவதில் பிரச்சனை இருக்காது என கருதப்படுகிறது.

அதிகம் படித்தவை:  அஜித்,விஜய் யாரும் ஆறுதல் சொல்ல முன்வரவில்லை - தயாரிப்பாளர் வருத்தம்

‘பைரவா’ என்ற சொல்லின் சரியான தமிழ் அர்த்தம் காக்கும் கடவுள் என்பதுதான்.

சமஸ்கிருதத்தில் பைரவா’ என்றால் ‘பயம்கொள்ள வைப்பவர்’ என்ற அர்த்தம் கூறப்படுகிறது.

மேலும் சிவபெருமான் கையில் உள்ள திரிசூலம் போன்று பைரவா’ என்ற டைட்டிலின் முதல் எழுத்து ‘பை’ வடிவமைக்கப்பட்டுள்ளது

அதிகம் படித்தவை:  சர்கார்- டான்சில் செம்ம சர்ப்ரைஸ்.! சன் பிக்சர் வெளியிட்ட ஸ்ரீதர் வீடியோ.!

மேலும் கல்வெட்டுக்களில் பதிவு செய்வது போன்ற எழுத்து வடிவில் இந்த டைட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

டைட்டிலேயே இவ்வளவு ரகசியங்களை ஒளித்து வைத்துள்ள இயக்குனர் பரதன், படத்தின் திரைக்கதையில் எந்த அளவுக்கு கவனம் செலுத்தியிருப்பார் என்பதை ஊகிக்க முடிகிறது.