ஹிப்ஹாப் ஆதி 2

சுந்தர் சி தயாரிப்பில் உருவாகும் படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்குகிறார். இப்படம் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி, காதல், காமெடி என எடுக்கப்பட்டுள்ளது. ஆதி ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். கரு.பழனியப்பன், RJ விக்னேஷ் காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், புட் சட்னி ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

HIP HOP THAMIZHA AATHI

ஆதி இசையமைக்கும் இந்த படத்திற்கு, அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்திற்கு “நட்பே துணை” என்று பெயர் வைத்துள்ளனர். 12 மணிக்கு டீஸர் ப்ரோமோ வெளியானது.