2000ம் ஆண்டில் வெளிவந்த கமல்ஹாசனின் ஹே ராம் திரைப்படம் அப்போது வணிக ரீதியில் தோல்வியை சந்தித்திருந்தாலும் பின்னாளின் அனைத்து சினிமா ரசிகர்களாலும் பொக்கிஷமாக பேசப்பட்டது.

இத்திரைப்படத்திற்கு ஒவ்வொருவரும் எடுத்துக்கொண்ட சிரத்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல, படத்திற்கு பாடல்கள் இறுதியாக இளையராஜா அவர்களால் இசையமைக்கப்பட்டது, அதனால் இளையராஜா நடிகர்கள் உதடு அசைவிற்கு பொருந்துமாறு பாடல்களை இசைத்தார்.

hey-ram-Kamal-Haasanபடம் சுதந்திரத்திற்கு முன்னது என்பதால் சாபு சிரில் படத்தில் வரும் ஒவ்வொரு கட்டிடத்தையும் கவனமாக செட் அமைத்திருந்தார்.

படத்தில் நீல வண்ண வானம் தெரியாத வண்ணம் ஒவ்வொரு வெளிகாட்சிகளும் எடுக்கப்பட்டிருக்கும்.

இத்தனை பெருமைகள் கொண்ட படத்தின் திரைக்கதை புத்ததகத்தை எழுத்தாளர் புவியரசு எழுதி வெளியிட்டார். இவர் சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் இதுவரை வெளிவந்ததில் மிகச்சிறந்த திரைக்கதை புத்தகம் ஹேராம்தான் என்று பல விமர்சகர்கள் பாராட்டியுள்ளனர். அந்த அளவிற்கு படத்தில் நாம் தவறவிட்ட சின்ன சின்ன நுட்பமான விஷயங்களை இந்த புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளலாம்.

இப்படிப்பட்ட இந்த புத்தகத்தின் மறுபதிப்பு தற்போது நிகழ்ந்தது.

kamal heyramஇது குறித்து கமல்ஹாசன் கூறியுள்ளதாவது
ஹே!ராம் திரைக்கதைப் புத்தகத்தை மறுபதிப்புச்செய்த பிரசுரத்தாருக்கும் இளந்தோழர் புவியரசு அய்யாவிற்கும் எனது நன்றிகள்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: தமிழ் சினிமாவின் உண்மை பொக்கிஷம் ஹேராம்.