Tamil Cinema News | சினிமா செய்திகள்
சமாளிப்பாரா ரஜினி! அடித்துக் கொள்ளும் கோலிவுட் மயில்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தின் நாயகியாக பலர் போட்டா போட்டிக் கொண்டு இருப்பதாக கோலிவுட்டில் சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாருக்கு இருக்கும் அந்தஸ்து இன்று வரை குறையவே இல்லை. பொறுமையாக நாயகன் நடித்து வந்த காலத்தில் தனக்கென ஒரு கிளாஸ் ஸ்டைலை ஏற்படுத்தி கொண்டு வெற்றி கண்டவர் ரஜினிகாந்த். அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு ரஜினிகாந்த் நடிக்க மாட்டார் என சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலாக பரவியது. ஆனால், அரசியல் ஒரு பக்கம் சென்றால் நடிப்பு ஒரு பக்கம் என லாஜிக் வைத்த தலைவர் மாஸாக தனது அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆனார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கிறார்.
வெகுகாலத்திற்கு பிறகு தயாரிப்புக்கு திரும்பி இருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. முதல்முறையாக ரஜினிக்கு இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகி இருக்கிறார். கோலிவுட்டில் மாஸ் காட்டி வரும் விஜய் சேதுபதி இப்படத்தில் ரஜினிக்கு சமமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாபி சிம்ஹா, சனத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தொடர்ந்து, படப்பிடிப்புகள் இமயமலையில் அமைந்துள்ள டார்ஜிலிங் பகுதியில் தொடங்கி இருக்கிறது. அங்கு ஒரு கல்லூரியில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட இருப்பதால், ரஜினி இப்படத்தில் பேராசிரியராக நடிக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்த் நாயகி தேர்வு தான் பல நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆனால், படக்குழுவிற்கு பேச்சுவார்த்தையில் திருப்தி இதுவரை ஏற்படவில்லையாம். த்ரிஷா, அஞ்சலி, சிம்ரன் ஆகிய நாயகிகள் பெயர்கள் தொடர்ந்து அடிப்பட்டு வருகிறது. ஆனால், ரஜினிக்கு நாயகி என யாருமே படத்தில் இல்லையாம். கிளைமேக்ஸ் காட்சிக்காக மட்டுமே நாயகிகள் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கிசுகிசுக்கிறது.
